கடந்த மூன்று ஆண்டுகளில் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர், அவர்களில் அதிகபட்சமாக 170,000 பேர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் என மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில், 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 3,92,643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர் என்று பதிலளித்தார்.
தனிநபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை துறந்தனர் என்றும் இவர்கள் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றனர் எனவும் வெளிவிவகார அமைச்சகம் வழங்கிய புள்ளி விபரங்கள் தெரிவித்தன.
குடியுரிமையை துறந்தவர்களில், 1,70,795 பேர் அமெரிக்க குடியுரிமையும், கனடாவில் 64,071 பேரும், ஆஸ்திரேலியாவில் 58,391 பேரும், இங்கிலாந்தில் 35,435 பேரும், இத்தாலியில் 12,131 பேரும், நியூசிலாந்தில் 8,882 பேரும், சிங்கப்பூரில் 7,046 பேரும், ஜெர்மனியில் 6,690 பேரும் பாகிஸ்தானில் 48 பேரும் குடியுரிமை பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | UAE: மனித நேயத்திற்கான Golden Visa பெற்ற முதல் தமிழர்
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான், கடந்த 2019 முதல் நடப்பு ஆண்டு வரை இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களின் விவரங்களையும், எண்ணிக்கையையும் தெரிவிக்குமாறு கேள்வியெழுப்பினார்.
அதற்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இந்திய குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் குடியுரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கிய விவரங்களை மேற்கோள் காட்டி பதிலளித்தார்.
மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ