’இன்னைக்கு ஒரு புடி... வாங்க சாப்பிடலாம்’ என்பது தான் அசைவ பிரியர்களுக்கான டிரேட் மார்க் வசனமாக மாறிவிட்டது. யூடியூப்பில் உணவு வீடியோக்களை பார்த்த பலரும் இந்த வசனத்தை மனதில் வைத்தே வீட்டில் கறிக்குழம்பை சமைத்து வருகின்றனர். சுவையாக டேஸ்டாக இருக்க வேண்டும் என நினைக்கும் பலர், நல்லி எலும்பா தேடி தேடி வாங்கி சென்று சமைத்து சுவைக்கிறார்கள். முடியாதவர்கள் ரக ரகமான கடைகளுக்கு படையெடுக்கிறார்கள். இதெப்படியோ காட்டில் இருக்கும் ஒட்டகச் சிவிங்கிக்கு தெரிந்துவிட்டதுபோலும். அதுகளுக்கு யூடியூப் எல்லாம் தெரியாது என்றாலும், மனிதர்களின் டிரெண்டிங்கிற்கு ஏற்ப தங்களையும் அப்டேட் செய்து கொள்கின்றன.
மேலும் படிக்க | சுறா மீனை சுமந்து செல்லும் கடல் பருந்து... இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!
நீங்க மட்டுமா நல்லி எலும்புகள தேடி தேடி சாப்புடுவீங்க... இதோ பார் நானும் சாப்புடுறேன் என்கிற கணக்கா எங்கேயோ தேடித் திரிந்து ஒரு எலும்பை பிடித்துவிட்டது. எலும்பு கிடைத்த மகிழ்ச்சியில் அது நன்கு ரசித்து சுவைத்து வேற சாப்பிடுகிறது. புல்ல மட்டும் தான அது சாப்பிடும் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது கொஞ்சம் ஷாக் தான். சைவத்தை மட்டுமே சாப்பிட்ட உங்களுக்கு அசைவத்து மீது எப்போது நாட்டம் வந்தது என காட்டில் இருக்கும் சிங்கம் புலி எல்லாம் மைண்ட் வாய்ஸில் கேக்குற கதையா, ஒட்டகச் சிவிங்கி எலும்ப சாப்பிடற வீடியோ பார்க்கும்போது இருக்கிறது.
இனி நாங்களும் வேட்டையாடுவோம் தயாராக இருந்துக்கோங்க பாஸ்..... நீங்க மட்டும் எத்தனை நாளுக்கு எங்களை துரத்தி துரத்து அடித்து சாப்பிடுவீங்க, உங்க எலும்புகளையெல்லாம் கடித்து நொறுக்கி திங்கறுதுக்கான டிரெய்னிங் தான் இது. இன்னும் கொஞ்சம் நாள் மட்டும் பொறுங்க நான் உங்கள தேடி வந்துடுறேன் என சிங்கம் புலிகளை நேரில் பார்த்தால் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டே ஒட்டகச் சிவிங்கி சாப்பிடுவது போல் இருக்கிறது.
(@susantananda3) June 12, 2023
இந்த வீடியோ இப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாகியுள்ளது. பலரும் அதிர்ச்சி கலந்து வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். செடி கொடி புற்களை சாப்பிட்ட ஒட்டகச்சிவிங்கி எலும்பு சாப்பிடுவது ஆபத்தான சமிக்கையாகவும் இயற்கை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்திருக்கும் ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்த நந்தா கூட எழுதியிருக்கும் பதிவில், " ஓட்டகச்சிவிங்கிகள் தாவரவகைகள் மற்றும் மரத்தின் உச்சியில் உள்ள இலைகள் மற்றும் மொட்டுகளை சாப்பிட தங்களின் நீண்ட கழுத்தைப் பயன்படுத்தி சாப்பிடும். ஆனால் அவை இப்போது பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர். சில நேரங்களில் பாஸ்பரஸ் பெற எலும்புகளை கூட மென்று சாப்பிடலாம். இயற்கை அற்புதம்” என தெரிவித்துள்ளார். இது குறித்து பலரும் தங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ