இவர்தானா கமலின் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர்?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' திரைப்படம் தயாராகவிருக்கிறது. 

Last Updated : May 31, 2018, 12:37 PM IST
இவர்தானா கமலின் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர்? title=

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' திரைப்படம் தயாராகவிருக்கிறது. 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து இருக்கும் படம் 2.0. தற்போது இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படம் எடுக்க இருக்கிறார்.

அரசியல் களத்தில் இறங்கி உள்ள நடிகர் கமல், அவர் கைவசம் உள்ள படங்களையும் முடிக்க எண்ணியுள்ளார். இந்நிலையில் முதல் பாகத்தின் மெகாஹிட்டுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியன் 2 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க உள்ளது. மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க உள்ளது.

Trending News