டெஸ்லா காரில் தெரிந்த பேய்... அரண்டுபோன பயணிகள்: வைரல் வீடியோ

டெஸ்லா காரை கல்லறைகள் வழியாக ஓட்டிச் செல்லும்போது அதில் பேய் உருவம் தெரியும் வீடியோ யூடியூப்பில் வைரலாகியுள்ளது. டெஸ்லா கார் பேய்களைக் கூட கண்டுபிடிப்பதாக நெட்டிசன்கள் வியப்பை தெரிவித்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2023, 04:58 PM IST
  • டெஸ்லா காரில் தெரிந்த பேய்
  • யூடியூபில் வைரல் வீடியோ
  • உண்மையா? நிபுணர்கள் சொல்வது என்ன?
டெஸ்லா காரில் தெரிந்த பேய்... அரண்டுபோன பயணிகள்: வைரல் வீடியோ  title=

மின்சார கார் மார்க்கெட்டில் உலகம் முழுவதும் கோலோச்சிக் கொண்டிருக்கும் டெஸ்லா, பேய் கண்டுபிடிப்பதாக பரவிக் கொண்டிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. தொழில்நுட்ப உதவிகள் அதிகம் இருக்கும் அந்த கார் கல்லறை வழியாக செல்லும்போது, அங்கு உலாவிக் கொண்டிருக்கும் பேய்களையும் காண்பிப்பதாக அந்த வீடியோவில் இருப்பவர்கள் கத்தி கூச்சலுடன் தெரிவித்துள்ளனர். 

உலகம் முழுவதும் நிறைய கட்டுக்கதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. வேண்டுமென்றோ அல்லது ஏதோ ஆதாயத்துக்கோ இதுபோன்ற கட்டுக் கதைகளை பரப்பவர்கள் நிறைய உள்ளனர். அவர்கள் பரப்பும் கதைகளை நம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். என்றோ ஒருவர் சொல்லிவிட்டுபோன கட்டுக்கதைகள் அடுத்த தலைமுறையில் உண்மையின் வடிவமாக மாறியிருக்கும் கட்டுக்கதைகளும் உள்ளன. தொழில்நுட்ப உலகும் அதற்கு தப்பவில்லை. தாங்கள் உருவாக்கும் கட்டுக்கதைகளுக்கு ஏற்ப, பொய்யாக ஆடியோ வீடியோக்களை தயாரித்து வெளியிடப்படுகிறது. இதனுடைய உண்மை தன்மையை ஆராயாமல் உண்மையென ஏற்றுக் கொள்பவர்களே இங்கு அதிகம். 

மேலும் படிக்க | தலைக்கு தில்ல பாத்தியா..சிங்கத்திடம் வீண் வம்பு செய்த குள்ள நரி: வீடியோ வைரல்

அந்தவகையில் டெஸ்லா கார் பேயை படம் பிடித்து காட்டுவதாக வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்த வீடியோ இப்போது அதிக பார்வைகளை பெற்று, செய்திகளிலும் இடம்பெறத் தொடங்கிவிட்டது. யூடியூப்பில் வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், ஒரு குழுவினர் டெஸ்லா காரில் கல்லறைகள் இருக்கும் வழியாக செல்கின்றனர். டெஸ்லா காரை பொறுத்தவரை கார் எங்கு செல்கிறது? செல்லும் வழியில் என்னவெல்லாம் முன்னால் இருக்கிறது என்பதை காருக்குள் இருக்கும் ஸ்கீரினில் காட்டிவிடும். அவர்கள் ஓட்டிச் செல்லும் காரிலும் முன்னாள் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை டெஸ்லா ஸ்கிரீனில் காண்பிக்கிறது.

கல்லறை வழியாக செல்லும் அவர்களுக்கு கல்லறைகள் அந்த ஸ்கிரீனில் காண்பிக்கப்படுவதுடன், ஒரு உருவரும் தென்படுகிறது. இதனை பார்த்து அவர்கள் பயத்தின் உச்சத்துக்கே சென்று கத்தி கூச்சலிடுகின்றனர். டெஸ்லா கார் கல்லறைகளுக்கு மேல் இருக்கும் ஆவிகளையும் படம் பிடித்து காட்டிவிட்டது என கத்துகின்றனர். 3டி வடிவில் உங்களுக்கு காரின் முன்னால் இருக்கும் உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் தென்படுவார்கள். அவ்வாறு  தென்பட்டதை தான் பேய் என யூட்டியூபில் வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இப்போது 50 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கார் துறையில் இருக்கும் நிபுணர்கள் இதன் உண்மை தன்மை சந்தேகத்திற்கு உட்பட்டது என கூறியுள்ளனர். நேரில் இருந்தவர்களுக்கு மட்டுமே இதன் உண்மை தெரியும் என்றும், டெஸ்லா தொழில்நுட்பம் பேய்களை கண்டுபிடிக்கும் என்பது போன்ற கதைகளை இதுவரை கேள்விபட்டதில்லை என விளக்கம் அளித்துள்ளனர். 

மேலும் படிக்க  | கொட்டும் மழையில்... குடையுடன்.. மணமக்களின் வேற லெவல் டெடிகேஷன்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News