Viral Video: சிங்கங்களை தெறிக்க விட்ட நீர்யானை! ஆளை விடு என தலைதெறிக்க ஓடும் சிங்கங்கள்!

Viral Video: காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கங்களை, நீர் யானை தனது ஆக்கோரஷமான தாக்குதலால் தெறிக்க விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 6, 2023, 06:52 PM IST
  • நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை.
  • ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும்.
  • பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளை விட சிறியவை.
Viral Video: சிங்கங்களை தெறிக்க விட்ட நீர்யானை! ஆளை விடு என தலைதெறிக்க ஓடும் சிங்கங்கள்! title=

காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கம் வீரத்தில் சளைத்தது அல்ல. அதனுடன் சண்டை இடவோ அல்லது பகைத்துக் கொள்ளவோ எந்த விலங்கிற்கும் தைரியம் வராது. சிங்கத்தின் கம்பீரமான தோற்றமே நம்மை கதி கலங்கச் செய்யும், பிற விலங்குகள் அனைத்தும் பார்த்தாலே தலை தெறிக்க ஓடி விடும். ஆனால், இங்கே நீர்யானை ஒன்றல்ல, இரண்டல்லா மூன்று சிங்கங்களை விரட்டியடிக்கிறது. ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.  தி கிரேட் ப்ளைன்ஸ் கன்சர்வேஷன் இந்த சம்பவத்தின் வீடியோவை யூடியூப்பில் பகிர்ந்து கொண்டு,  "மறக்க முடியாத தருணம்" என்ற தலைப்பில், பதிவிட்டுள்ள நிலையில், இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. 

வீடியோவில்,  மூன்று சிங்கங்கள் ஆற்றைக் கடப்பதைக் காணலாம். தன்னுடைய ஏரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கங்களை பார்த்த ஒரு ராட்சத நீர்யானை, படு வேகமாக நீந்தி வருவதையும் காணலாம். அது நீந்தி வரும் வேகத்தை பார்த்தாலே அது எவ்வளவு ஆக்கிரோஷமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். வந்த அதே வேகத்தில், மூன்று சிங்கங்களில் ஒன்றை பிடித்து தாக்கி கரையை நோக்கி தள்ளுகிறது. உயிர் பிழைத்தால் போதும் என சிங்கம் தப்பித்து கரையேறுகிறது.

மேலும் படிக்க | Viral Video: மல்லுக்கட்டும் பூனைக் குட்டிகள்! இது பூனைகளின் மல்யுத்த போட்டி!

வைரல் வீடியோவை கீழே  காணலாம்:

 

 

இந்த வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளியாகி இணைய பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Wow Terrifying என்ற ட்விட்டரில்பதிவிடப்பட்ட, இந்த வீடியோ 21.4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதோடு, இந்த வீடியோவில் கீழ் கிட்டத்தட்ட 5,000 பேர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 

நீர்யானை பாலூட்டி இனம்.  தாவரங்களை உண்டு வாழும் இது கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. சிங்கங்களை விட இவை ஆக்கிரோஷமானவை  என கூறப்படுகிறது.  இவை 1500 முதல் 3200 கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளை விட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் எல்லைக்குள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News