Viral video: தொப்பி அணிந்து உலா வரும் நாய் குட்டியின் க்யூட் வீடியோ

மனிதக் குழந்தையைப் போலவே, விலங்குகளின் குட்டிகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2022, 04:10 PM IST
  • தன்னை விட பெரிய தொப்பியை அணிந்துள்ள நாய்க்குட்டி.
  • பயனர்களை பெரிதும் கவர்ந்து வீடியோ.
  • வீடியோ 24 மணி நேரத்தில் 5.1 மில்லியன் பார்வைகளை கடந்தது.
Viral video: தொப்பி அணிந்து உலா வரும் நாய் குட்டியின் க்யூட் வீடியோ title=

இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் பெரும் ரசிக பட்டாளத்தை ஈர்த்த ஒரு வைரல் வீடியோவை இஞ்கே காணலாம். 

மனிதக் குழந்தையைப் போலவே, விலங்குகளின் குட்டிகள் செய்யும் குறும்புகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். அதிலும் நாய் குட்டி செய்யும் குறும்புகளை ரசிக்காதவர் யாராவது இருக்க முடியுமா என்ன...  வைரலாகி வரும்  வீடியோவில், அழகான  பக் நாய்க்குட்டி,  தொப்பி அணிந்து கொண்டு உலா வருவதைக் காணலாம்.  வேடிக்கை என்னவென்றால், நாய்க் குட்டியை பல மடங்கு பெரியதாக இருக்கும் அந்த தொப்பியை அணிந்திருப்பதால், அதன் தலையின் சிறு பகுதி மட்டுமே தெரிகிறது. 

பக் (pug) சண்டைக்காரன் என்ற பொருள் தரும் இந்த கலப்பின நாய்களுக்கும், தனித்துவமான உடல் தன்மைகளைப் பெற்றிருக்கும். இதன் தோல் சுருக்கங்களுடன் காணப்படும்.  சற்று பருத்த உடல் வாகுடன், கனச்சதுரம் போன்ற வடிவில் காணப்படும். 

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

இந்த வீடியோ  @buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.  இந்த பதிவில், தலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்னும் பொருளில், பார்வையாளர்களிடம் "தலைப்பு?" எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ 24 மணி நேரத்தில் 5.1 மில்லியன் பார்வைகளை கடந்தது.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

 

 

இந்த அழகான பக் செய்யும் குறும்பை வெகுவாக ரசித்து மெய் மறந்த பார்வையாளர்கள், பல விதமான கருத்துகளைப் பதிவேற்றி வருகின்றனர். அதில் விலங்குகள் எப்பொழுதும் உங்களை ஏதோ ஒரு வகையில் வியக்க வைக்கும் என்று ஒருவர் சரியாகச் சொல்லியிருக்கிறார். பருத்த உடல் அமைப்பை கொண்ட நாய் குட்டி தொப்பி அணிந்து உலா வருவது உண்மையின் உங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் என உறுதியாக கூறலாம்.

மேலும் படிக்க | Viral Video: இது குதிரையின் பியானோ கச்சேரி... கேட்டுத் தான் பாருங்களேன்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News