அஸ்தமனமாகி அருள் புரிவார் குரு: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான அதிர்ஷ்டம் கிடைக்கும்!!

Guru Asta 2023: குரு அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் குருவின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 03:18 PM IST
  • குருவின் அஸ்தமனத்தால் ஏற்படும் பலன்களை குறிப்பாக மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் காணலாம்.
  • இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும்.
  • இவர்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
அஸ்தமனமாகி அருள் புரிவார் குரு: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான அதிர்ஷ்டம் கிடைக்கும்!! title=

குரு அஸ்தமனம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில் தேவகுரு பிருஹஸ்பதிக்கு தனி இடம் உண்டு. குரு பகவான் சுப கிரகமாக பார்கப்படுகிறார். எந்த ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும்போதும், அல்லது அஸ்தமனமாகி உதயமாகும்போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. அந்த வகையில் குருவின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். 

இந்த மார்ச் 28 அன்று, குரு பகவான், அஸ்தமனமாகவுள்ளார். பொதுவாக குருவின் அஸ்தமன நிலையில் திருமணம் போன்ற சுப காரியங்களை செய்வதில்லை. ஜோதிடத்தின் படி, குரு அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் குருவின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும். இந்த அதிர்ஷ்டக்கார ராசிக்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி, குருவின் அஸ்தமனத்தால் ஏற்படும் பலன்களை குறிப்பாக மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் காணலாம். இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும். இவர்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பண ஆதாயம் ஏற்படும். அதன் காரணமாக நபரின் பொருளாதார நிலை வலுவடையும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.

துலாம்

ஜோதிட சாஸ்திரப்படி துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் வரப்பிரசாதமாக அமையும். அனைத்து செயல்களில் வெற்றி கிடைக்கும். பணப் பலன்களைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ப்புகள் உள்ளன. இதனுடன், அலுவலக பணிகள் மற்றும் வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் பெறுவார்கள். உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு நேரம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கடகம்

இப்போது கடக ராசிக்காரர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். இவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு, பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுபடுவார்கள். இதனுடன், வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை தேடி வரும்! காதல் ராசிபலன்!

மீனம்

இந்த நேரம் மீன ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், இவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமய, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த காலத்தில் எந்த பணியை தொடக்கினாலும், அதில் வெற்றி கிடைக்கும். இப்போது சிவ பெருமானின் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள். இதுமட்டுமின்றி, இந்த மாதம் வேலை, வியாபாரம் போன்றவற்றுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் வரை ஹை அலர்ட் காலம், எச்சரிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News