உதயமானார் சனி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், கேட்டது கிடைக்கும்

Shani Uday 2023: சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த உதயம் பல அபரிமிதமான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2023, 09:21 AM IST
  • சனியின் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அள்ளித்தரும்.
  • இந்த நேரத்தில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
  • ஆரோக்கியமும் மேம்படும்.
உதயமானார் சனி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், கேட்டது கிடைக்கும் title=

சனி பகவானின் உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: வண்ணங்களின் பண்டிகையான ஹோலி, 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வண்ணங்களைப் பரப்பப் போகிறது. ஹோலிக்கு முன், சனி பகவான் அவருக்குப் பிடித்த ராசியில் உதயமாகியுள்ளார். சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த உதயம் பல அபரிமிதமான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும். ஹோலி பண்டிகை முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். 

மார்ச் 6, 2023 இரவு 11.36 மணிக்கு சனி பகவான் உதயமானார். அவர் கும்ப ராசியில் பெயர்ச்சியாகி சில நாட்களில் கும்பத்திலேயே அஸ்தமனமானார். சனியின் உதயத்தால் மகிழ்ச்சிகரமான நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்கள் சனியின் உதயத்தால் ஆதாயம் பெறுவார்கள். எதிரிகள் அழிக்கப்படுவார்கள். பொருளாதார நிலை மேம்படும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிக நல்ல நேரமாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கூடும். உங்கள் காதல் விவகாரங்களுக்கு இந்த காலம் சாதகமானது.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்! 

ரிஷபம்: 

சனியின் உதயத்தால் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் நற்பெயர் உயரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தனிமையில் இருப்பவர்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு நபரை சந்திக்கலாம். 

மிதுனம்:

சனியின் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அள்ளித்தரும். இந்த நேரத்தில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியமும் மேம்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தனுசு: 

சனியின் உதயத்தால் தனுசு ராசிக்காரர்களின் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அனைவருடனும் அன்பாக பழகி நல்ல பெயரை பெறுவீர்கள். 

மகரம்: 

சனியின் உதயம் உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்களை அள்ளித் தரும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பழைய நோயிலிருந்து விடுபடுவீர்கள். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். பணம் சேமிக்க இப்போது பல வாய்ப்புகள் வந்து சேரும். உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பஞ்ச யோகம்! ‘இந்த’ ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News