தெய்வங்களின் அருட்பார்வை இருந்தாலும், ஒருவரின் விதிப்படி நடக்க வேண்டியவற்றிற்கு அவரவர் ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களே செய்யும். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்த நவகிரகங்கள் அவரவர் கர்மாவுக்கு ஏற்ற பலனைக் கொடுக்கும்.
இந்தக் கடமைகளை இறைவன் தான் நவகிரகங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். எனவே நவக்கிரகங்களை வழிபடுவது வாழ்வில் நிம்மதியைக் கொடுக்கும்.
நவக்கிரகங்களில் சனி பகவான் நீதிக்காரகர் என்று பெயர் பெற்றவர். ஒருவரின் நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலனை கொடுக்கும் அவருக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்தால் வாழ்வில் பிரச்சனைகள் எழாது.
சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்கள் இவைதான்...
மேலும் படிக்க | இவை இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்
இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்களிடம் சனி தேவ் கோபப்படுவார் என்று கூறப்படுகிறது.
தொழிலாளிகளை துன்புறுத்துபவர்கள் மீது சனீஸ்வரர் கருணை காட்டுவதில்லை.
பெற்றோரை மதிக்காதவர்களை சனீஸ்வரர் மன்னிப்பதில்லை. பிறர் பணத்தை அபகரிப்பவர்களுக்கு சனீஸ்வரர் தக்க பாடம் புகட்டுவார்.
அமாவாசை நாளில், இறைச்சி மற்றும் மது அருந்துபவர்கள் மீது சனிதேவன் கோபப்படுவார்
குடியிருக்கும் வீட்டின் மேற்குப் பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பது சனீஸ்வரரின் கோபப்பார்வையை அந்த வீட்டின் மீது ஏற்படுத்தும்.
ஊனமுற்றவர்களை கேலி செய்பவர்கள் மீது சனி பகவான் கோபப்படுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஜூலை 12 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்
சனிதேவருக்கு கோபம் ஏற்படுத்தும் விஷயங்களைப் போலவே, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விஷயங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
சனிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சனியை வணங்கி எள் தீபம் ஏற்றுபவர்கள் மீது சனீஸ்வரரின் கருணைப்பார்வை படும்.
சனி ஸ்தோத்திரத்தை 27 நாட்களுக்கு காலையிலும் மாலையிலும் தொடர்ந்து ஏழு முறை பாராயணம் செய்து, பிரார்த்தனை செய்பவர்களின் கோரிக்கையை சனீஸ்வரர் தீர்த்து வைப்பார்.
மேலும் படிக்க | 141 நாட்கள் சனி வக்ர பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருங்க
சனி பகவான் அடுத்த மாதம் ஜூலை 12 முதல் வக்ர நிலையில் இருக்கப் போகிறார். அப்போது அவருடைய அருட்பார்வையை பெற, அவருக்கு பிடிக்காததை தவிர்த்து, அவரை மகிழ்விக்கும் செயல்களை செய்யுங்கள்.
சனிக்கிழமையன்று குளித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து சனிபகவானை வணங்கவும். நல்லெண்ணை தீபம் ஏற்றி சனீஸ்வரரை வணங்குவது அவருக்கு பிடித்தமானது.
அதேபோல, அரச மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சனீஸ்வர பகவானை வணங்குபவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவார் சனீச்வர பகவான்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR