Venus transit: உடல் ஆரோக்கியத்திற்கும், வசதிகளுக்கும் காரணமான சுக்கிரன் மே 30 ஆம் பெயர்ச்சியாகிறது, சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து வெளியேறி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மே 2 செவ்வாய்க்கிழமையன்று மிதுன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெற்றது. தற்போது கடகத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல ராசிக்காரர்களுக்கு செல்வம், வருமானம், சுகபோகங்கள் பெருகப் போகிறது, ஆனால் இரண்டு ராசிக்காரர்கள் சுக்கிரனின் பெயர்ச்சியால் சில பாதிப்புகளை சந்திக்க போகிறார்கள். முக்கியமாக அந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் அவர்களது உறவுமுறையில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மே 30 ஆம் தேதி அன்று இரவு 07.51 மணிக்கு சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து பெயர்ச்சியாகி கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அதன்பின்னர் ஜூலை 6-ம் தேதி வரை சுக்கிரன் கடக ராசியில் இருக்கிறார், அதன்பின்னர் மே 7-ம் தேதி அதிகாலை 04:28 மணிக்கு சிம்ம ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெறுகிறது.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
கடகம்:
உங்கள் ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் நடக்கிறது, இதன் காரணமாக உங்கள் மரியாதை, செல்வம் மற்றும் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சுக்கிரனின் சஞ்சாரம் உங்கள் மனைவியுடனான உறவைப் பாதிக்கலாம், உங்கள் திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக, உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் அல்லது எதிர்பாராத ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம், இது கணவன்-மனைவி உறவில் பிரச்னையை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில், உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். ஏனெனில் தவறான வார்த்தைகள் அல்லது நடத்தைகள் கணவன்-மனைவிக்குள் விவாதத்தை மட்டுமே உருவாக்கும் என்பதால் நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். மே 30 முதல் ஜூலை 6 வரையிலான காலம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு கடினமாக இருக்கும் மற்றும் காதல் வாழ்க்கையையும் பாதிக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு பெரும்பாலான இடங்களில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பலன்கள் கிடைக்கும். ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை கடினமான காலங்களை சந்திக்க நேரிடும், திருமணமான தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக சிலருக்குதங்கள் மாமியாருடனான உறவில் பெரிய விரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பேசி சமாதானமாக அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். உங்கள் மோசமான உறவு உங்கள் குழந்தைகளையும் பாதிக்கும், எனவே கணவன் மனைவி இருவரும் எவ்வித வாக்குவாதங்களிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மேலும் காதல் ஜோடிகளும் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | சனி ஜெயந்தியில் உருவாகும் சுப யோகங்கள்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட மகிழ்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ