சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத இருக்கின்றனர். இந்த போட்டியில் வென்று தொடரை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது சிஎஸ்கே. அதற்கேற்ப பிளேயர்களை முன்பே சென்னை சேப்பாக்கத்து வரவழைத்து யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டங்களை வீரர்களுக்கு தெரியபடுத்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கேப்டன் தோனியை பொறுத்த வரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு முழுமையாக விடை கொடுக்கும் முடிவில் இருக்கிறார். அதனால், 5வது முறையாக சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார். மேலும், தன்னைப் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தக்கூடிய ஒருவரை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பும் இந்த ஆண்டு அவர் மீது இருக்கிறது. கடந்த ஆண்டு ஜடேஜாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டபோது, அவரால் திறம்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை கையாள முடியவில்லை. அதனால், இந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரில் யாரேனும் ஒருவரை கேப்டனாக்கும் முடிவில் இருக்கிறார் தோனி.
மேலும் படிக்க | விராட் கோலி சாப்பிடும் அரிசி விலை என்ன தெரியுமா...? கேட்டா அதிர்ச்சி ஆயிடுவிங்க!
தோனி கைகாட்டும் நபரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே நிர்வாகமும் தயாராக இருக்கிறது. இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பென்ஸ்டோக்ஸின் ஆட்டத்தை பார்த்து இருவரில் யாரேனும் ஒருவரை கேப்டனாக பரிந்துரைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் தோனி. பென் ஸ்டோக்ஸ் இப்போது காயத்தின் பிரச்சனையில் இருந்து மீண்டிருந்தாலும் கவனமாக இருக்குமாறு மருத்துவர்களும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவுறுத்தியிருக்கிறது.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு அவர் தயாராக வேண்டும் என்பதால், இது குறித்து பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடமும் பேசியிருக்கிறார். அவரும் ஸ்டோக்ஸின் கோரிக்கைகளுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அதனால் அடுத்த வாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து ஐபிஎல் பயிற்சியை தொடங்க இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.
மேலும் படிக்க | IPL 2023: தோனி கோப்பையை வெல்ல மாட்டார்: ஸ்ரீ சாந்த் வந்ததும் சொன்ன அதிரடி கருத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ