Euro 2020: இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி அணி

முன்னதாக, இங்கிலாந்தில் நடந்து வந்த யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இத்தாலி, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2021, 09:44 AM IST
Euro 2020: இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி அணி title=

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.  இதில்  இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி அணி.

முன்னதாக, இங்கிலாந்தில் நடந்து வந்த யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இத்தாலி, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன.  இறுதிப் போட்டியில், ஆட்டத்தின் துவக்கத்தில் இரண்டாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணி ஒரு கோல் போட்டதால் ஆட்டம் மிக விறுவிறுப்பாக துவங்கியது. அதன்பின் எந்த அணியினரும் கோல் போடாததால், முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.  ஆனால் இரண்டாவது பாதியில் 67 வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியோனார்டோ போனுசி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

ALSO READ | Copa America 2021: பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா

இதனால், ஆட்டத்திற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இரு அணிகளுக்குமே கோல் ஏதும் போட முடியவில்லை. இதையடுத்து,  பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்றது.

ஐரோப்பிய நாடுகள் அணிகளுக்கிடையேயான யூரோ கால்பந்து போட்டித் தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு மாதமாக கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைந்த இந்த தொடர், இன்றோடு முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News