IND vs AUS Live Update: 8 ஓவர் போட்டி.. 9.30 மணிக்கு ஆரம்பம்

IND vs AUS Match Live Update: மைதானம் ஈரமாக இருப்பதால் ஓவர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைப்பு. டாஸ் 9.15 மணிக்கு போடப்படும். ஆட்டம் 9.30 மணிக்கு ஆரம்பமாகும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 23, 2022, 08:59 PM IST
  • கடந்த சில நாட்களாக நாக்பூரில் கனமழை பெய்து வருகிறது.
  • மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், டாஸ் போடுவதில் தாமதம்.
  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மொத்தம் 25 டி20 போட்டிகள் நடந்துள்ளன.
IND vs AUS Live Update: 8 ஓவர் போட்டி.. 9.30 மணிக்கு ஆரம்பம் title=

20:50 23-09-2022

8 ஓவர் போட்டி:
இன்றைய 2வது டி20 போட்டியின் டாஸ் 9.15 மணிக்கு போடப்படும். ஆட்டம் 9.30 மணிக்கு ஆரம்பமாகும். வெறும் 8 ஓவருக்கு போட்டி நடைபெறும். ஈரப்பதம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 


20:12 23-09-2022

டாஸ் போடுவது 8.45 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டத:

மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், டாஸ் போடுவதில் மீண்டும் தாமதம். முதலில் 7 மணிக்கு டாஸ் போடுவதாக இருந்தது. ஈரப்பதம் காரணமாக 8 மணிக்கு டாஸ் தள்ளி வைக்கப்பட்டது. இன்னும் ஈரப்பதம் எதிர்பார்த்த அளவிற்கு குறையாததால் இரண்டாவது முறையாக டாஸ் போடுவது 8.45 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


IND vs AUS 2nd T20 Live Update: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு இந்தப் போட்டி "செய் அல்லது மடி" என்ற நிலை. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர். ஆனால் நாக்பூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் பந்துவீச்சாளர்கள் அதிகம் தாக்கப்பட்டனர். இரண்டு அணிகளும் 200-க்கும் அதிகமான ரன்கள் அடித்தது. முதலில் ஆடிய இந்திய அணி 208 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி நான்கு பந்துகள் மீதமுள்ள நிலையில் 211 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முயற்சிக்கும். மறுபுறம், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்ய வலுவான மறுபிரவேசத்தை எதிர்பார்க்கிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே எத்தனை டி20 போட்டிகள் நடந்துள்ளன:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இதுவரை மொத்தம் 25 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 13 ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தியாவில் இரு அணிகளும் தலா 9 முறை மோதியதில் 4 ஆட்டங்களில் இந்தியாவும், 4ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

மேலும் படிக்க: IND vs AUS: 2வது டி20 நடைபெறுவதில் சிக்கல்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் இந்தியாவின் கனவு கேள்விகுறி

இரு அணிகளிலும் விளையாட வாய்ப்பு 11 வீரர்கள் பட்டியல்:

இந்திய அணியில் சாத்தியமான 11 வீரர்கள்: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (வாரம்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா/உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்/ ரவிச்சந்திரன் அஷ்வின்.

ஆஸ்திரேலியா அணியில் இந்த 11 வீரர்கள் விளையாடலாம்: ஆரோன் பின்ச், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட், மேத்யூ வேட் (வி.கே.), பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

மேலும் படிக்க: Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News