இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 298 ரன்கள் குவித்துள்ளது...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போடியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் கேரி 18(27), அரோண் பின்ச் 6(19) ரன்களில் வெளியேற, அதிரடி நாயகன் மார்ஸ் சிறப்பாக விளையாடி 131(123) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக கெளன் மேக்ஸ்வெல் 48(37) ரன்கள் குவித்தார். ஆஸி., வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை குவித்தார், மொகமது ஷமி 3 விக்கெட்டுகளை குவித்தார்.
Innings Break!
Australia 298/9 in 50 overs.
Thoughts? https://t.co/YEn4BPRgQV #AUSvIND pic.twitter.com/BNUL9owzJg
— BCCI (@BCCI) January 15, 2019
இதனையடுத்து இந்தியா 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.