IND vs SL : உலகக்கோப்பைக்கு பிளான் போடும் பிசிசிஐ... முக்கிய வீரருக்காக பலியாகும் ரிஷப் பண்ட்

india vs srilanka : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவாண் மட்டுமின்றி, மற்றொரு அதிரடி வீரரும் பிசிசிஐயால் சத்தமில்லாமல் கழட்டிவிடப்பட்டுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 28, 2022, 09:17 AM IST
  • டி20இல் இருந்து விராட், ரோஹித், கேஎல் ராகுல் நீக்கம்.
  • சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
  • பிருத்வி ஷாவை தேர்வுக்குழு இம்முறையும் கண்டுகொள்ளவில்லை.
IND vs SL : உலகக்கோப்பைக்கு பிளான் போடும் பிசிசிஐ... முக்கிய வீரருக்காக பலியாகும் ரிஷப் பண்ட்  title=

India squad for Srilanka : இலங்கை அணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் தொடர்களை விளையாட உள்ளது. இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியை நேற்றிரவு பிசிசிஐ அறிவித்தது. இந்த அணிகளை பிசிசிஐ சமீபத்திய நீக்கிய சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவே தேர்வு செய்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. 

முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து, விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார். சூர்யாகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆனால், வழக்கம்போல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிருத்வி ஷாவுக்கு இம்முறையும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.  மேலும், சுப்மன் கில், சஹால் டி20 அணிகளுக்கு திரும்பியுள்ளனர். ஷிவம் மவி, முகேஷ் குமார் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரோகித் மட்டுமல்ல இவரையும் கழற்றிவிடும் பிசிசிஐ! இலங்கை தொடரில் காத்திருக்கும் ஷாக்

மறுபுறம் ஒருநாள் அணியில், ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். விராட் கோலி, ஷ்ரேயஸ் ஆயர், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கபடவில்லை. குறிப்பாக, பல ஒருநாள் தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வந்த தவாண் ஓரங்கப்பட்டுள்ளார். 

ஜடேஜா, பும்ரா ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. எனவே, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோரை இந்திய இரண்டு தொடர்களிலும் களமிறக்கியுள்ளது. இதில், குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், அதிரடி வீரர் ரிஷப் பண்ட் இரண்டு தொடர்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பண்டை வெள்ளை பந்து போட்டிகளில் இருந்து தூக்கிவீசப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை மட்டுமின்றி, அதற்கு முன்பு நடந்த 2021 டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் என கடந்த 2 ஆண்டுகளில் (2021, 2022) சர்வதேச டி20 போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் விளையாடி, 577 ரன்களை அடித்திருக்கிறார். அவர் டி20 அரங்கில் மொத்தம் 987 ரன்கள் அடித்திருந்தாலும், அவரின் சராசரியும், ஸ்ட்ரைக் ரேட்டும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்தாண்டு அவரின் டி20 பேட்டிங் சராசரி 21.41, கடந்தாண்டு 30.43 ஆக இருந்தது. 

டி20 போட்டிகளில் மட்டுமின்றி ஒருநாள் தொடர்களிலும் பண்டின் தேவை குறைந்துள்ளது. இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்டரான ரிஷப் பண்டிற்கு போட்டியாக, மற்றொரு இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்டர் இஷான் கிஷன் உருவெடுத்துள்ளார். இவரின் பேட்டிங்கும் தற்போது மேம்பட்டுள்ளது. இதுவும் ரிஷப் பண்டிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தொடக்க இடங்களில் இறங்கி ஆடும் இஷான் கிஷனை எப்படி, பின்வரிசையில் ஆடும் ரிஷ்ப் பண்டுடன் ஒப்பிட்டு எப்படி அவரை ஒதுக்க முடியும் என கேள்வியெழலாம். ஆனால், ரிஷப் பண்டிற்கு இஷான் கிஷன் மட்டுமில்லா, சூர்யகுமார் யாதவும் முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் தேவைப்படும் பினிஷர் ரோலை ரிஷப் பண்டை விட சூர்யகுமார் சிறப்பாகவும், சீராகவும் செய்கிறார் என்ற நம்பிக்கை வலுபெற்றுள்ளது. இதன்காரணமாகவே, ரிஷப் பண்டிற்கு அடுத்து நடக்க இருக்கும் இலங்கை அணியுடனான தொடர்களில்  வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிகிறது. ஆனால், அவர் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும் படிக்க |  தோனி மகளுக்கு ஸ்பெஷல் கிப்ட் - மெஸ்ஸி கொடுத்த ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News