தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் தோனி?

தோனி இன்றைய போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2022, 04:35 PM IST
  • இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
  • தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ரசிகர்கள் இன்றைய போட்டிக்காக ஆர்வமாக உள்ளனர்.
தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் தோனி? title=

இன்று (மே 20) மாலை 7 மணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்து கொண்டு உள்ளனர்.  காரணம், இன்றுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.  இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று பல செய்திகள் வெளிவர தொடங்கி உள்ளன.  2020ம் ஆண்டு கடைசி போட்டியில் ஓய்வு பெறுவீர்களா என்ற கேள்விக்கு "defenetly not" என்று பதில் அளித்து இருந்தார் தோனி, இந்த வார்த்தை மிகவும் பிரபலமானது.  பிறகு, 2021ம் இதே கேள்வி எழுந்த பொது "still haven't left behind" என்று பதில் அளித்து இருந்தார்.  

மேலும் படிக்க | மூன்று முறை டக் அவுட்... பேட்டியில் கண் கலங்கிய விராட் கோலி

மேலும், தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன் என்றும் ஒரு பேட்டியில் கூறி இருந்தார் தோனி.  இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன் தனது கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி,  இந்த முடிவு தோனி ஓய்வு பெற போகிறார் என்ற வார்த்தைக்கு அடித்தளமிட்டது.  பிறகு பாதியில் ஜடேஜா கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.  இது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.  இந்த ஆண்டு ஐபிஎல் பிளே ஆப்பில் இருந்து ஏற்கனவே சிஎஸ்கே அணி வெளியேறி உள்ளது.  

இன்று லீக் ஆட்டத்தில் தனது போட்டியை ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.  இந்த போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வை தோனி அறிவிப்பாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.  தோனி அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே இக்கட்டான நிலையில் இருந்த போது, தனது பேட்டிங்கின் மூலம் அணியை காப்பாற்றி உள்ளார்.  தற்போது தோனி 40 வயதை கடந்துள்ளார், இருப்பினும் பீல்டில் பிட் ஆகவே காணப்படுகிறார்.  யார் என்ன சொன்னாலும், இறுதி முடிவை எடுக்க போவது தல தோனி தான்.  

 

மேலும் படிக்க | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News