பும்ரா பராக்... வந்தது கம்பேக் அப்டேட் - அப்போ உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான்...!

Jaspirit Bumrah Injury Update: நீண்ட காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா, தற்போது அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்து தொடரில் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 16, 2023, 10:52 AM IST
  • பும்ரா கடைசியாக கடந்தாண்டு செப்டம்பரில் இந்திய அணிக்கா விளையாடினார்.
  • கடந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
  • முதுகில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பும்ரா பராக்... வந்தது கம்பேக் அப்டேட் - அப்போ உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான்...! title=

Jaspirit Bumrah Injury Update: கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரோடு வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். அப்போதிருந்து, ஜஸ்பிரித் பும்ரா நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். 

அதே நேரத்தில், இந்திய அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவது குறித்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. விரைவில் பும்ராவின் அதிரடி ஆட்டத்தை நாம் களத்தில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.

கம்பேக் கொடுக்கும் பும்ரா!

ஜஸ்பிரித் பும்ரா தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி பெற்று வருகிறார். வலைப்பயிற்சியில் தினமும் 7-8 ஓவர்கள் வீசுகிறார். ஊடக அறிக்கையின்படி, எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. செப்டம்பரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கான அணியில் பும்ராவை சேர்க்க அணி நிர்வாகம் விரும்பியது, அதன் பிறகு ஒருநாள் உலகக் கோப்பையையும் இந்தியா விளையாட உள்ளது.

மேலும் படிக்க | கிரிக்கெட்ல இந்த சாதனையெல்லாம் இருக்கா? 'டபுள் ஹாட்ரிக்' எடுத்த 6 பெளலர்கள்...

முதுகு அறுவை சிகிச்சை

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஜஸ்பிரித் பும்ராவின் முதுகு அறுவை சிகிச்சையை கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஃபோர்ட் ஆர்த்தோபெடிக்ஸ் மருத்துவமனையின் புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரோவன் ஷூட்டன் செய்தார். ஜஸ்பிரித் பும்ரா தற்போது விவிஎஸ் லக்ஷ்மனின் மேற்பார்வையின் கீழ் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்று வருகிறார். அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஆகஸ்ட் 18 முதல் 23 வரை 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

டேஞ்ஜரஸ் பவுலர்

ஜஸ்பிரித் பும்ரா இதுவரை இந்திய அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகள், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 128 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும், டி20யில் 70 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா தற்போது இந்தியாவின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஜூலை 2022இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு பும்ரா (ஜஸ்பிரித் பும்ரா) இடுப்பில் 'ஸ்ட்ரெஸ் ஃபிராக்ச்சர்' காயத்தால் அவதிப்பட்டார். இந்த காயம் காரணமாக, அவர் தொடர்ந்து அணியில் இடம்பிடிக்கவில்லை. 

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் உள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மட்டும் முடிவடைந்த நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன்பின், இலங்கை - பாகிஸ்தானில் நடைபெறும் 50 ஓவர்கள் வடிவிலான ஆசிய கோப்பையில் பங்கேற்கிறது. இதையடுத்து, அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பை தொடரும் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | 'எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்க’ சர்பிராஸ்கான் குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News