Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா?

யூரோ கால்பந்துப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முதல்முறையாக முன்னேறியது. இந்த சாதனையை இங்கிலாந்து அணி படைத்தாலும், அரையிறுதி சுற்று சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்தது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2021, 09:55 PM IST
  • இங்கிலாந்துக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கிறது UEFA
  • போட்டியின்போது மைதானத்தில் பட்டாசுகளை வெடிkகப்பட்டன
  • ரசிகர்களின் உற்சாகம், அணிக்கு அபராதம்
Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா? title=

புதுடெல்லி: வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெர்ற அரையிறுதிப் போட்டியில் டென்மார்க்கை வீழ்த்தி, இங்கிலாந்து கால்பந்து அணி யூரோ 2020 கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

2:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, வரலாற்றில் முதல்முறையாக யூரோ கால்பந்துப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சாதனையை இங்கிலாந்து அணி படைத்தாலும், அரையிறுதி சுற்று சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்தது.  

வெம்ப்லி ஸ்டேடியத்தில் டென்மார்க்குக்கு எதிரான யூரோ 2020 அரையிறுதி ஆட்டத்தின் போது இங்கிலாந்து ரசிகர்களின் செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (The Union of European Football Associations) இங்கிலாந்துக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்துள்ளது.  

Also Read | 55 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் யூரோ கால்பந்து இறுதியில் இங்கிலாந்து

இங்கிலாந்து ஸ்ட்ரைக்கர் ஹாரி கேனிடமிருந்து கூடுதல் நேரத்தில் பெனால்டியைக் காப்பாற்ற முயன்றபோது ஒரு ரசிகர் டென்மார்க் கோல்கீப்பர் காஸ்பர் ஷ்மிச்சலின் (Schmeichel) முகத்திலும் கண்களிலும் லேசர் கற்றையை (laser beam) பாய்ச்சினார். அது கோல்கீப்பருக்கு (goalkeeper) கவனச்சிதறலை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், ஷ்மிச்செல் கேன், திறமையாக கோலை தடுத்தார்.  

லேசர் கற்றை சம்பவம் தவிர, இங்கிலாந்து ரசிகர்கள் தேசிய கீதம் இசைக்கும்போது குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல, போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர்கள் மைதானத்திற்குள் பட்டாசுகளை வெடித்தனர்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐரோப்பிய கால்பந்து நிர்வாகக் குழு, “ஜூலை 7ம் தேதியன்று லண்டனின் வெம்ப்லி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து-டென்மார்க் போட்டியின்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Also Read | Dhoni-ன் பிறந்தநாளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு சிக்ஸர் வாழ்த்து

இங்கிலாந்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இவை:

1. இங்கிலாந்து அணியின் ஆதரவாளர்கள் லேசர் கற்றையை பயன்படுத்தினார்கள். இது, UEFA ஒழுங்கு விதிமுறைகளின் (DR)பிரிவு 16(2)(d)இன் கீழ் தவறு.

2.தேசிய கீதம் இசைக்கும்போது இங்கிலாந்து ரசிகர்கள் இடையூறு செய்தனர். இது பிரிவு 16(2)(g) DR கீழ் தவறு

3.மைதானத்தில் பட்டாசு வெடித்தது, பிரிவு 16 (2) (சி) டி.ஆர் கீழ் தவறு.

Also Read | மதுரை தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

"இந்த வழக்கை யுஇஎஃப்ஏ கட்டுப்பாடு, நெறிமுறைகள் மற்றும் ஒழுக்காற்று அமைப்பு ((UEFA Control, Ethics and Disciplinary Body CEDB)) உரிய நேரத்தில் தீர்க்கும்."

இங்கிலாந்து ரசிகர்களின் செயல்களுக்கு பெரிய அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான யூரோ 2020 இறுதிப் போட்டியும் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Also Read | Olympics: 'A' தர பிரிவில் தகுதி பெற்று வரலாறு படைத்த நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News