சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகியதில் பல விமர்சனங்கள் இருந்தாலும், பிசிசிஐ தலைவராக இருந்த கடைசி நாளில் சவுரவ் கங்குலி புன்னகையுடன் இருந்தார். மீண்டும் பிசிசிஐ தலைவராக இருக்க வேண்டும் என்று ஆசை பட்ட கங்குலியின் கனவு பலிக்கவில்லை. இருப்பினும், வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது (AGM) அவர் இதனை தனது முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. கங்குலிக்குப் பிறகு பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி பதவியேற்றுள்ளார். பின்னுக்கு கங்குலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "ரோஜர் பின்னிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். புதிய பிசிசிஐ குழு பல முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். தற்போது பிசிசிஐ சிறந்த கைகளில் உள்ளது.
உலக நாடுகளை கம்பேர் செய்யும் போது இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது, எனவே அவர்களுக்கு அனைத்து அதிர்ஷ்டங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்," கங்குலி பேசினார். மேலும், ரோஜர் பின்னியை உலகக் கோப்பை ஹீரோ என்றும் கங்குலி பேசினார். வீரர்களின் உடற்தகுதி மற்றும் தரமான ஆடுகளங்களில் தான் கவனம் செலுத்தப்படும் என்று பின்னி பேசினார். "நான் முதன்மையாக இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். முதலில் வீரர்களுக்கு ஏற்படும் காயங்களைத் தடுப்பது. உலகக் கோப்பைக்கு சற்று முன்பு ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்தார், இது முழு திட்டத்தையும் பாதிக்கிறது,"
"இரண்டாவதாக, நான் நாட்டில் உள்ள ஆடுகளங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்தியாவில் விக்கெட்டுகள் விறுவிறுப்பாக இருக்க வேண்டும், அது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நமது வீரர்களுக்கு உதவுகிறது. என்ன தவறு நடக்கிறது என்பதை நாங்கள் உட்கார்ந்து விவாதிக்க வேண்டும். எங்களிடம் சிறந்த பயிற்சியாளர்கள், பிசியோக்கள் மற்றும் மற்ற நிபுணர்கள் உள்ளனர். அவர்களுடன் பேசி, ஏன் பல வீரர்கள் காயமடைகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று பின்னி கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், மைதானத்தில் பார்வையாளர்களுக்கு பல வசதிகளை வழங்க உள்ளோம்.
நல்ல உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட பல்வேறு மைதானங்களை உருவாக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | உலக கோப்பையில் இருந்து விலக பாகிஸ்தான் திட்டம்: பிசிசிஐக்கு மிரட்டல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ