91ஆவது பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, பின்னியிடம் இன்று பொறுப்பை ஒப்படைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில், அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு 5 ஸ்டார் ஹோட்டல், இந்தியாவிற்கு மட்டும் 4 ஸ்டாரா? அவமதிக்கும் ஐசிசி!
இந்நிலையில், பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய தொடரில் இந்திய அணியை அனுப்ப வாய்ப்பில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடரை, ஒரு பொதுவான நாட்டில் வைத்து நடத்தினால் இந்தியா அதில் பங்கேற்கும் எனவும் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த ஆசியக்கோப்பை ஒருநாள் தொடராக நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில், 2005-06ஆம் ஆண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மேலும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் 2012-13க்கு பிறகு இருநாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும்தான் மோதிக்கொள்கின்றன.
இதனால், ஆசியக்கோப்பையில் இந்தியா நிச்சயம் பங்கேற்கும் என கூறப்பட்டது. எனவே, இந்திய அணி அடுத்தாண்டு பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
ஏனென்றால், இந்தியா சார்பில் 4 சுற்றுப்பயணங்களை உறுதி செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை, ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை, பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை, ஐசிசி ஒருநாள் உலக்கோப்பை ஆகிய 4 தொடரிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.
இதில், ஐசிசி ஒடிஐ உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரெக்கார்டுக்காக விளையாடாதீங்க கோலி; மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் முன்னாள் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ