இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருக்கும் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடுவில் ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்திய பிசிசிஐ நிகழ்வில் ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையைப் பற்றி கேட்டபோது, அவர்கள் என்னை வெளியேற்றினார்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் அஷ்வின் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
அஷ்வின் பேச்சு
ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் இருப்பது எப்படி உள்ளது என்று அஷ்வினிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "அவர்கள் என்னை வெளியேற்றிவிட்டார்கள்" என்று கிண்டலாக பதில் அளித்தார். மேலும் பேசிய அவர், "நான் நீண்ட நாட்கள் வீட்டில் இருந்ததில்லை. நான் இதற்கு முன்பு எனது குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டுள்ளேன். ஆனால் அவர்களை இறக்கிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது புதிதாக உள்ளது. அவர்களுடன் நாள் முழுக்க நேரத்தை செலவழிப்பது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. நான் இதையும் கொஞ்சம் ரசிக்கிறேன்" என்று பேசியுள்ளார்.
One of the finest all-rounders in international cricket with a career decorated with class, consistency and commitment!
Congratulations to Ravichandran Ashwin for winning the BCCI Special Award#NamanAwards | @ashwinravi99 pic.twitter.com/QNHx4TAkdo
— BCCI (@BCCI) February 1, 2025
அஷ்வின் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தார் அஷ்வின். டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என மொத்தமாக 765 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பேட்டிங்கிலும் 6 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் உட்பட 4,394 ரன்கள் அடித்துள்ளார்.
சச்சினுடன் விளையாடியது பற்றி அஷ்வின்
சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து விளையாடியது பற்றி அஸ்வின் பேசியுள்ளார். "சச்சின் டெண்டுல்கருக்கு அருகில் நின்று விளையாட வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பையனுக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி மற்றும் கனவு இருக்கும். என்னுடைய மொத்த கிரிக்கெட் பயணமும் உயர்வானது, ஒரு போட்டியை மட்டும் குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை, முழுப் பயணமும் அதிக முக்கியமானது. நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும், தனிமனிதனாகவும் நிறைய பரிணாம வளர்ச்சியடைந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் அஸ்வின்
38 வயதான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஏலத்தில் அவரை ரூ. 9.75 கோடிக்கு வாங்கியது.
மேலும் படிங்க: முதல் தர கிரிக்கெட்டில் விராட் கோலியை தட்டி தூக்கிய அந்த 9 பவுலர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ