Cricket Olympics: விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்? சாத்தியமா? உண்மை என்ன?

அடுத்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் சேர்த்துக் கொள்ளப்படுமா? இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது அதற்கான முன்மாதிரி திட்டமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2021, 02:37 PM IST
  • விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்? சாத்தியமா?
  • லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்சில் கிரிக்கெட் இடம் பெறுமா?
  • இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது அதற்கான முன்மாதிரி திட்டமா?
Cricket Olympics: விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்? சாத்தியமா? உண்மை என்ன? title=

2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்ப்பதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டுள்ளதாக ஐசிசி தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.  

லாஸ் ஏஞ்சல்சில் 2028ம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி முயற்சி செய்துவருகிறது.  அதற்கான ஏலத்தினையும் தொடங்கியுள்ளது ஐசிசி.  இதற்காக ஒரு தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  

30 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.  இங்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்த்தால் பார்வையாளர்கள் மூலம் வருமானத்திற்கும் நல்ல உதவிகரமாக இருக்கும்.  மேலும் அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த இது உதவிகரமாக இருக்கும் என்று அமெரிக்க கிரிக்கெட் போர்டும் எண்ணுகிறது.  

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்த்து அதை ஒரு முன்மாதிரியாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு எடுத்துக்கொள்ள உள்ளோம்.  ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது அது கிரிக்கெட்டிற்கு பெருமை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அது ஒரு தனி சிறப்பை கொடுக்கும் என ஐசிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

Also Read | என்னதான் ஆச்சு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக எவ்வளவு நிதி தரமுடியும் என்று உறுப்பினர்களிடம் ஐசிசி விவாதித்தது. இதுகுறித்த ஒரு கேள்வி நிறைந்த படிவமும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 

இதற்கு முன்பே ஐ.சி.சி இதுபோன்ற பல முயற்சிகளை செய்திருந்தாலும் அவை எதுவும்  வெற்றிபெறவில்லை. ஆனால் இந்த முறை எப்படியாவது நடத்தி ஆக வேண்டும் என்ற ஐசிசி முடிவெடுத்துள்ளது.   

1896ல் முதன் முதலில் ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கப்பட்டபோது கிரிக்கெட் போட்டிகளும் அதில் இடம்பெற்றது. ஆனால் அந்த சமயத்தில் அணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. தற்போது 128 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறப்போகிறது என்று எண்ணி ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

Also Read | Tokyo Olympics: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு CSK 1 கோடி ரூபாய் பரிசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News