இரண்டாவது இன்னிங்சிலும் இந்தியாவின் பலம் நீடிக்குமா!!

Last Updated : Jul 28, 2017, 01:59 PM IST
இரண்டாவது  இன்னிங்சிலும் இந்தியாவின் பலம் நீடிக்குமா!! title=

இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி புதனன்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான நேற்று தொடர்ந்த விளையாடிய இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. 

3 ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. தற்போதைய நிலவரப்படி இலங்கை தனது அணைத்து விகேட்டுகளையும் இழந்து 291 எடுத்தது. பின் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 13 ஓவருக்கு 47/1 எடுத்துள்ளது. மேலும் இங்கிலத்தை விட 356 முன்னிலையில் உள்ளது. 9 விக்கேட்டுகள் மீதம் உள்ள நிலையில் இந்தியா இலங்கைக்கு அதிக இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்க படுகிறது. 

Trending News