சேலம்: தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்..!

தமிழகத்தில் முதல் முறையாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்செயல்பாட்டுக்கு வந்தது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 4, 2023, 01:12 PM IST
  • தமிழகத்தில் முதன்முறையாக
  • 12 மணி நேரம் இயக்கும் போஸ்ட் ஆஃபீஸ்
  • சேலத்தில் செயல்பாட்டுக்கு வந்தது
சேலம்: தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்..! title=

நாடு முழுவதும் இந்திய தபால் துறையில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 965 தபால் நிலையங்கள் இயங்குகிறது. இதில் தமிழ்நாடு வட்டத்தில் கீழ் 11,865 தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் துறையில் தபால் சேவை மட்டுமல்லாமல் வங்கி சேவை பரிவர்த்தனைகளான சேமிப்பு கணக்கு தொடர் வைப்பு கணக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் பொது வருங்கால வைப்பு திட்டம் மாதாந்திர ,சேமிப்பு கணக்கு வருமான கணக்கு மற்றும் அஞ்சல் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சேவைகளில் வங்கி சேவை படுத்தி பரிவர்தனைகளையும் அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகளையும் மதியம் 2:30 மணி வரை மட்டுமே தபால் நிலையங்களில் பெற முடியும்.

மேலும் படிக்க | 'மறு வாழ்வு பெற்றுள்ளோம்' ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் சென்னையில் கண்ணீர்..!

தபால் சேவை மற்றும் பார்சல் சேவையை தலைமை தபால் நிலையங்களில் இரவு 9 மணி வரை மற்ற துணை தபால் நிலையங்களில் மாலை ஆறு மணி வரையிலும் பெறலாம். இதன் காரணமாக பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு சென்று அந்த சேவையை பெற வேண்டும் என்றால் காலை நேரத்தில் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது காலை 8:00 மணி முதல் மதியம் 3 மணி வரை அனைத்து சேவைகளும் ஒருங்கே கிடைப்பதால் அந்த நேரத்தில் பெரும்பாலான தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 12:00 மணி நேரம் செயல்படும் வகையில் சூரமங்கலம் தபால் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காலை எட்டு மணியிலிருந்து இரவு 8 மணியில் வரை அனைத்து சேவைகளும் இந்த தபால் நிலையத்தில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொதுமக்களின் நலம் கருதி இந்த சேவையை பகல் முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி  காலை 8 மணி முதல்  இரவு 8:00 மணி வரையிலும் சூரமங்கலம் தபால் நிலையத்தில் வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாந்தர வருமான கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் முதலாக துவக்கப்பட்டுள்ள இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் சூரமங்கலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News