உள்கட்டமைப்பு வசதி இல்லாத 92 இன்ஜினியரிங் கல்லூரிகள்!

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : May 14, 2019, 12:34 PM IST
உள்கட்டமைப்பு வசதி இல்லாத 92 இன்ஜினியரிங் கல்லூரிகள்! title=

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உரிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை என்று 92 இன்ஜினியரிங் கல்லூரிகளில் இளநிலை பிரிவில் மாணவர் சேர்க்கையை 50% குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 537 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 170 பேராசிரியர்கள் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர். முடிவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சரியான உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை இல்லாதது, ஆய்வுக்கூடம் வசதி இல்லாதது தெரியவந்தது. 

இதையடுத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி இல்லாத மொத்தம் 92 கல்லூரிகளில் மீது அண்ணா பல்கலைக்கழகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி, இந்தாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில், 25% முதல் 50% வரையில், இன்ஜினியரிங் சீட்டை குறைத்துள்ளது.

Trending News