சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை மிகப்பெரிய அளவில் நடந்ததை அடுத்து தற்போது பீப் என்னும் மாட்டுக்கறி பிரச்சனை ஏற்படுமோ என்ற நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மற்றும் மற்ற ஒரு சில வட மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டது போல் தமிழகத்திலும் தடை விதிக்கப்படுமா என்ற எண்ணம் சென்னை போலீசாரின் செயலால் தற்போது எழுந்தது. நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் தான் சாப்பிட்ட மாட்டுக்கறியை புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். யாரையும் டேக் செய்யாமல் வெறும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் மாட்டு கறி என மட்டும் எழுதி இருந்தார்.
மேலும் படிக்க | மாஜி அமைச்சரின் பெண் வீக்னஸ் : சிக்க வைக்க திட்டம் போடும் ஓபிஎஸ்
இந்த பதிவிற்கு தானாக முன்வந்து சென்னை காவல்துறை "இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது, தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்" என்று பதில் அளித்து இருந்தது. போலீசாரின் இந்த பதிவு இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. உணவு, உடை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம், இதில் காவல்துறை எவ்வாறு தலையிடலாம் என்று கடும் கண்டன குரல்களும் எழுந்துள்ளது. இதற்கு சென்னை மாநில காவல்துறை என்ன விளக்கம் கொடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நீதி பேசும் கட்சி என்று தன்னை முன்னிறுத்தி கொள்ளும் திமுகவின் ஆட்சியிலேயே மாட்டுக்கறிக்கு தடையா என்று சந்தேகம் எழும்புவதாக ட்விட்டர்வாசிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
ஏற்கனவே போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருந்து வரும் நிலையில் சென்னை காவல் துறையின் இந்த பதிவு கண்டனங்களுக்கு உள்ளானது. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டது பெரும் பேசு பொருளானது. பல வாரங்கள் கடந்தும் இன்னும் அங்கு பிரியாணி திருவிழா நடைபெறாத நிலையில், தற்போது மீண்டும் மாட்டுகறி சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் கடும் எதிர்ப்பு வந்ததால் காவல்துறையினர் அபுபக்கர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கமெண்டுகளை தற்போது நீக்கியுள்ளனர்.
Who handles this ID handle.,
Why what is wrong with that post.
அந்த பதிவில் என்ன தப்பு.
என்ன பதிவிட வேண்டும்
என்ன சாப்பிட வேண்டும் என்று @chennaipolice_ எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை.கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. https://t.co/B5I70NBNIw
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) July 7, 2022
மேலும், திமுகவை சேர்ந்த தருமபுரி எம்பி செந்தில்குமார் காவல்துறையை கடுமையாக விமர்சித்து உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "யார் இந்த அக்கவுண்ட்டை உபயோகிப்பது? அந்த பதிவில் என்ன தவறு உள்ளது? என்ன பதிவிட வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை போலீஸ் எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். காவல்துறை இந்த பதிவை நீக்கிய போதிலும் இணையத்தில் சர்ச்சை தீரவில்லை என்பதே உண்மை. இந்த பதிவிற்கு தற்போது காவல்துறை விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளது.
@AbubackerOfficl தாங்கள்பதிவிட்டTweet சென்னை காவல் துறையின் @chennaipolice_ பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான Twitter பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) July 7, 2022
மேலும் படிக்க | தமிழகத்தில் மாட்டுக்கறிக்கு தடையா? போலீசாரின் செயலால் வலுக்கும் சர்ச்சை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR