Chidambaram Lok Sabha Constituency Full Details: தமிழ்நாட்டின் 27வது நாடாளுமன்றத் தொகுதி சிதம்பரம் ஆகும். இந்த தொகுதி பட்டியல் இன சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு தனித் தொகுதியாகும். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அருகில் உள்ள அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பரவியுள்ளது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி விவரம்
பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளையும், கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதிகளை இணைத்து தொகுதி மறுவரையறைக்கு பிறகு 2009 ஆம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இங்கு தான் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இருக்கிறது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்த வரை திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு என கணிசமான வாக்கு வாங்கி உள்ளது. 1957 முதல் இங்கு மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. முதன் முதலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா இரண்டு முறை வென்றுள்ளது.
தமிழ்நாட்டில் 2009ல் தொகுதி மறுவரையறைக்கு பிறகு கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு முன்னதாக கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், சிங்காநல்லூர், பல்லடம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இருந்தது.
மேலும் படிக்க - தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறு
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் எப்பொழுது?
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்
- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,10,915
- ஆண் வாக்காளர்கள்: 7,49,623
- பெண் வாக்காளர்கள்: 7,61,206
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 86
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்
- சிதம்பரம்
- காட்டுமன்னார் கோவில் (தனி)
- புவனகிரி
- அரியலூர்
- ஜெயங்கொண்டம்
- குன்னம்
மேலும் படிக்க - தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறு
2024 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - திருமாவளவன்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - சந்திரஹாசன்
பாரதிய ஜனதா கட்சி - கார்த்தியாயினி
(நாம் தமிழர் கட்சி - ஜான்சி ராணி
2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதி வெற்றி நிலவரம்
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 500,229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
4,97,010 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் பி.சந்திரசேகர் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த சுயேச்சையாக போட்டியிட்ட அ.இளவரசன் 62,308 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சிவஜோதி 37,471 வாக்குகளும், மக்கள் நீதி மையம் வேட்பாளர் டி.ரவி 15,334 வாக்குகளும் பெற்றனர்.
மேலும் படிக்க - தேர்தல் 2024: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ