Diwali sweets complaints | தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் ஆகியவற்றை கடைகளில் வாங்குவீர்கள். அப்போது நீங்கள் தரமான இனிப்பு, கார வகைகளை வாங்கியிருக்கிறீர்களா? என்பதை வாடிக்கையாளர்களாக உறுதி செய்து கொள்வது உங்களுடைய கடமை. பிரபலமான கடை என்ற பெயரை வைத்து எந்த உணவுப் பொருளையும் வாங்க கூடாது. நுகர்வோர் ஆகிய நீங்கள் எந்த ஒரு இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளை வாங்கும்போதும் சில அடிப்படையான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வாங்கும்போது நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தீபாவளி இனிப்பு, காரம் வாங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை :
எந்த கடையில் என்ன பொருட்கள் வாங்கினாலும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இருக்கிறதா என்பதை அவசியம் பார்க்கவும். இனிப்பு, காரம் உள்ளிட்ட பாக்கெட்டுகளில் இந்த தேதிகள் இருக்கிறதா, அச்சிடப்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள். இது குறித்து கடை விற்பனையாளரிடமும் கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். ஒருவேளை தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த பொருளை வாங்காதீர்கள். கடை விற்பனையாளர் அண்மையில் தயாரித்தது என்று கூறினாலும் தவிர்த்துவிடுங்கள். கடையில் எல்லா பொருட்களும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பதை கவனியுங்கள். சுகாதாரமான சூழல் இருந்தால் அந்தக்கடையில் இனிப்பு, கார வகைகளை வாங்கவும்.
மேலும் படிக்க | போலியாக ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை.. அரசு போட்ட ஒரே கண்டிஷன்
உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளிப்பது எப்படி?
ஒருவேளை நீங்கள் இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வாங்க சென்ற கடையில் சுகாதாரம் இல்லை என்றால் அங்கிருந்தபடியே உணவு பாதுகாப்புத்துறைக்கு நீங்கள் புகார் அளிக்கலாம்.
உங்களது உணவு தொடர்பான புகார்களை பின்வரும் வழிகளில் தெரிவிக்கலாம்
1. 9444042322 என்ற வாட்சப் எண்ணிற்கு புகார் அனுப்பவும்
2. unavupukar.fsda@tn.gov.in
3. TN Food Safety Consumer APP
4. https://foodsafety.tn.gov.in/app/complaints 5.https://foscos.fssai.gov.in/consumergrievance/
6. Food safety connect App.
இந்த வழிமுறைகள் வழியாக புகைப்படம், வீடியோ, ஆடியோ, வாய்ஸ் மெசேஜ் அனுப்பி கூட கடையின் விவரத்தை தெரிவித்து உணவு பாதுகாப்புதுறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம். இனிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கக்கூடாது. விற்பனையாளர்கள், உணவு பொருள்களை கையாள்பவர்கள் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். இதை எல்லாம் கடைபிடிக்காத கடைகள் மீது நுகர்வோர் புகார் அளிக்கலாம்.
இறைச்சி மற்றும் பிற உணவுப் பொருட்கள்
கெட்டுப்போன இறைச்சி, பழைய உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளிக்கலாம். நீங்கள் புகார் அளித்தவுடன் சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி காலாவதியான உணவுப் பொருட்கள் இருந்தால் உடனே அகற்றிவிடுவார்கள். அத்துடன் அந்த கடைக்கு அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் படிக்க | தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொள்கைகள்! யார் யாரை எதிர்க்க போகிறார்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ