சென்னையில் சொத்து வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்...

சொத்துகளில் முதலீடு செய்வது சிலருக்கு புதிதாக இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் நல்ல தரக்கூடியது. ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்வதால் எதிர்காலத்தில் வாடகை, குத்தகை மூலம் வருமானம் ஈட்ட முடியும்.

Last Updated : Sep 22, 2020, 11:52 AM IST
    • அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்தவரை, நிலம் பல உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதால் உரிமையாளர்களுக்கு கூட்டு பட்டா இருக்கும்.
    • பட்டாவை ஆன்லைனில் இங்கே பார்க்கலாம். சொத்தின் பதிவு முடிந்ததும், பட்டா தானாகவே புதிய உரிமையாளருக்கு மாற்றப்படும்.
    • சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
சென்னையில் சொத்து வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்... title=

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (CMDA) சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர்ப்பகுதிகளில் 57 வீட்டு தளவமைப்புகளுக்கு (4,461 அடுக்கு) ஒப்புதல் அளித்தது. மேலும் பல குடிமக்கள் இவற்றில் ஒன்றில் முதலீடு செய்வதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 

சொத்து முற்றிலும் சட்டபூர்வமானது என்பதை சரிபார்த்து உறுதிசெய்வது மிகவும் முக்கியம். சொத்து வாங்குபவரின் மனதில் இருக்கக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் முயற்சி இங்கே.

 

ALSO READ | மவுலிவாக்கம் கட்டிடம் தரைமட்டமானது

நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவுசெய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது கிரயப் பத்திரம் (Sale Deed), கடன் பத்திரம் (Mortgage Deed), ஒப்பந்தப் பத்திரம் (Agreement) போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். 

சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம். அசல் ஆவணம் இல்லாமல் நகல் ஆவணத்தை வைத்து சிலர் சொத்தை விற்கத் துணிவார்கள். அப்படியிருக்கும்பட்சத்தில் நகல் ஆவணத்தை வைத்து இறுதி முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அசல் ஆவணம் உண்மையிலேயே தொலைந்துவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். 

சொத்தை விற்பவர் கொடுக்கும் ஆவணத்தையும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் ஆவணத்தையும் வாங்கிச் சரிபார்க்க வேண்டும். இரண்டிலும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்க்க வேண்டும். முக்கியமாக சர்வே எண், பத்திரப்பதிவு உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். 

அதேபோல் பத்திரத்தில் உள்ள கையொப்பத்தைச் சரிபார்ப்பது அவசியம். உங்களிடம் தரப்பட்ட ஆவணம் முழுவதும் போலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பின்வரும் விவரங்கள் பட்டாவில் பட்டியலிடப்பட்டுள்ளன:

  • மாவட்டம், தாலுகா மற்றும் கிராமத்தின் பெயர்
  • பட்டா எண்
  • உரிமையாளரின் பெயர்
  • கணக்கெடுப்பு எண் மற்றும் துணைப்பிரிவு
  • இது ஒரு ஈரநிலமா அல்லது உலர்ந்த நிலமா (தமிழில் நஞ்சை நிலம் / பஞ்சை நிலம்)?
  • நிலத்தின் பரப்பளவு மற்றும் வரி விவரங்கள்

பட்டாவை ஆன்லைனில் இங்கே பார்க்கலாம். சொத்தின் பதிவு முடிந்ததும், பட்டா தானாகவே புதிய உரிமையாளருக்கு மாற்றப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்தவரை, நிலம் பல உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதால் உரிமையாளர்களுக்கு கூட்டு பட்டா இருக்கும்.

இப்போது வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரு முறை என உங்கள் சொத்துக்கான வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தாக்கல் செய்து தேவையில்லாத வில்லங்கம் எவையும் உள்ளனவா அல்லது வாக்கப்பட்டுள்ளனவா என பார்த்து வருதல் அவசியம்.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | வீட்டுத் திட்டத்தை மலிவாகக் கொண்டு வந்தது ICICI வங்கி, இனி வீட்டிலிருந்து பிளாட் பார்க்க முடியும்

Trending News