அண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டி

மதுரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை தான் துரோகத்தின் மொத்த உருவம், பச்சோந்தி என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 7, 2024, 05:54 PM IST
  • அண்ணாமலை தான் உண்மையான பச்சோந்தி
  • ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது
  • எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேட்டி
அண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டி title=

பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை பதிலளித்தார்.  

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்த கேள்விக்கு:

சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திருநெல்வேலியில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார். சேலம் மாநகரத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்ட ஒழுங்கு  படுபாதாளத்தில் சென்று விட்டது. சர்வ சாதாரணமாக கொலை நடைபெறுகிறது. கசாப்பு கடையில் ஆட்டை வெட்டுவதைப் போல் ரவுடிகள் வெட்டி சாய்ப்பதை நாம் பார்க்கிறோம்.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' - போலீசார் சொல்வது என்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை எங்கள் தலைமை முடிவு தான். அம்மா இருக்கும்போது ஐந்து இடை தேர்தலை புறக்கணித்துள்ளோம். திமுக ஆட்சியில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது. அதனால் தான் தேர்தலை புறக்கணித்தோம். 

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு:

அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் விஸ்வாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. 2019ல் தேனியில் அவர் மகன் போட்டியிட்டதற்கு அங்கு மட்டும் தான் வேலை பார்த்தார் மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியை பற்றி கவலைப்படாமல் மகனைப் பற்றி கவலை பட்டார். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கு தொடர்ந்தார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார். அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீதமும் வாய்ப்பில்லை.

அண்ணாமலை துரோகி என்று கூறியது குறித்த கேள்விக்கு:

அண்ணாமலை தான் பச்சோந்தி. நான் துரோகி அல்ல, துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். அவதூறாக எங்கள் தலைவர்களை அவதூறாக கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம். இவர் கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர். 

கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்காதது குறித்த கேள்விக்கு:

கள்ளச்சாராயம் விவகாரத்தில் மாநில அரசு விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். 

கள்ளுக்கடை திறப்பது குறித்த கேள்விக்கு:

பிராந்தி குடித்தாலும் போதை தான் கள்ளு குடித்தாலும் போதை தான் சாராயம் குடித்தாலும் போதை தான். படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். மதுவிற்கு பழக்கமானவர்கள் உடனடியாக நிறுத்த முடியாது என்பது எனக்கு வந்த தகவல் எனவே படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும்" என கூறினார்.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News