காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை எந்நேரமும் நிரம்பிவிடும். இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரியின் துணை நதிகளான ஹாரங்கி மற்றும் ஹேமாவதி கட்டப்பட்டுள்ள அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது. மேலும் பலத்த கனமழை காரணமாக கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைடில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது. அணையின் நீர் இருப்பு 41.41 டிஎம்சி.,யாகவும், அணையில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கன அடியாகவும் உள்ளது.