நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற மூலிகை சுற்றுலாத்தலமாகக் கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்கு அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கொல்லிமலைக்கு செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் கொல்லிமலையில் நாளுக்குநாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசடைகிறது.
அதன்காரணமாக, இனிவரும் காலங்களில் கொல்லிமலைக்கு செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எனவே சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளைக்கு ஏசியால் நேர்ந்த சோகம்!
சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்படும் எனவும் அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் கொல்லிமலையில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுவதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ