Ration Card New Big Update Tamil | தமிழ்நாடு புதிய ரேஷன் கார்டு விநியோகம் குறித்து மெகா அப்டேட் வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என காத்திருந்தவர்களுக்கு அரசு தரப்பில் ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது. அதாவது, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு புதிய கார்டு விநியோகத்தை அரசு தொடங்கிவிட்டது. ஆனால், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களிடம் இரண்டு சான்றுகளை கட்டாயமாக்கியுள்ளது. இந்த இரண்டு சான்றுகளையும் வைக்காத நூற்றுக்கணக்கானவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..
ரேஷன் கார்டு ஏன் தேவை?
தமிழ்நாடு நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் மலிவு விலை சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களையும், விலையில்லா அரிசி வாங்குவதற்கும் ரேஷன் கார்டு கட்டாயம். இதுதவிர இன்னபிற அரசின் நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு இருப்பது அவசியம். இதனால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய ரேஷன் கார்டு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் இப்போது தொடங்கியுள்ளது.
இரண்டு சான்றுகள் கட்டாயம்
2023 முதல் பெறப்பட்ட 2.9 லட்சம் விண்ணப்பங்களில் 1.3 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. ஜூன் 2024-க்குப் பிறகு விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்த நிலையில் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு அரசு இரண்டு சான்றுகளை கட்டாயமாக்கியுள்ளது. பெயர் நீக்கல், பெயர் சேர்ப்புகளுக்கு இறப்புச் சான்றிதழ் மற்றும் திருமணச் சான்றிதழை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணபிக்கும் புதுமண தம்பதிகள் திருமண பதிவுச் சான்றிதழ் வைக்கவில்லை என்றால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ரேஷன் கார்டு விநியோகம் தாமதம் ஏன்?
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், முறையான சான்றுகள், நேரடி கள ஆய்வு ஆகியவை மூலம் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மற்ற விண்ணப்பங்கள், அதாவது ஏதாவது குறைகளுடன் உள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஓராண்டுக்கும் மேலாக ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாத நிலையில், இப்போது ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விநியோகமும் தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் உடனடியாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதால் இதனை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கார்டு விநியோகம் தாமதிக்கப்படுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ