சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கபட்டதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினார்கள்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுப்படி சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரண்டிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினார்கள். அவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சசிகலாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Chennai: #OPanneerselvam 's supporters celebrate #VKSasikala 's conviction pic.twitter.com/zllwJgL8hH
— ANI (@ANI_news) February 14, 2017
Chennai: #OPanneerselvam's supporters gather outside his residence after the DA case verdict that convicted #VKSasikala pic.twitter.com/4aeliXs341
— ANI (@ANI_news) February 14, 2017
முதலமைச்சர் வீட்டில் தொண்டர்கள் கொண்டாட்டம்.
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 14, 2017