மனைவி ஊராட்சி மன்ற தலைவர், கணவர் வெளியூர் திருடன்!

​​கைது செய்ய வந்த போது தப்பி ஓடிய கணேசனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்              

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2021, 10:38 AM IST
மனைவி ஊராட்சி மன்ற தலைவர், கணவர் வெளியூர் திருடன்! title=

​​திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருபவர் சுவேதா. இவரது கணவர் கணேசன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர், அக்டோபர் மாதம் கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் கணேசனுக்கு தொடர்புடையதாகக் கூறி கணேசனை கைது செய்வதற்க்காக கணேசனின் கையில் விலங்கை மாட்டி காரில் ஏற்ற முயன்றனர். இதனால் அங்கு கூடியிருந்த கணேசனின் ஆதரவாளர்களுக்கும் கோவை குற்றப்பிரிவு காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் கணேசனின் கையில் காவலர்கள் மாட்டி இருந்த விலங்கை கணேசனின் ஆதரவாளர்கள் அருகாமையில் உள்ள வெல்டிங் கடைக்கு சென்று வெல்டிங் இயந்திரம் மூலமாக கைவிலங்கை தகர்த்து கணேசனை காவல் துறையினரின் பிடியில் இருந்து பாதுகாத்து அழைத்துச் சென்றனர். 

ALSO READ | ’கொள்ளையர்களின் கரிசனம்’ உரிமையாளருக்கு செலவுக்கு வைத்துவிட்டு எஞ்சிய நகை, பணம் கொள்ளை

இதத்தள்ளுமுள்ளு சம்பவத்தில் காயமடைந்த கோவை காவலர்கள் ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில். கணேசனை கைது செய்ய வந்த காவல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கக் கோரி குனியமுத்தூர் குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு துத்திட்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும் கணேசனின் மனைவியுமான  சுவேதா உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 10 பேரை கடந்த 6 ஆம் தேதி இரவு கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காவல் துறையினரை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கணேசன் ஆம்பூர் அருகே வனப்பகுதியில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் ஆம்பூர் அருகே உள்ள மலை அடிவாரப் பகுதியில் பதுங்கியிருந்த கணேசனை கைது செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் ஆம்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

police

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் சுவேதா உட்பட 6 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்டுள்ள கணேசன் மீது ஏற்கனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூரில் திருடனாகவும், உள்ளூரில் அரசியல் வாதித்தாகவும் வலம் வந்து கணேசன் கைதானதை பார்த்த கிராம மக்கள் வாயடைத்து போய் நின்றனர். 

ALSO READ | சைபர் குற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் - மத்திய அரசு தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News