Ration Shops Timing: ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 09:25 AM IST
  • கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
  • 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள்
  • பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
Ration Shops Timing: ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம் title=

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது.,

கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (TN Lockdown) வரும் 14ம் தேதி முடிய நடைமுறைப்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள், மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி மணி முடிய செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்

இன்று முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை (Ration Shops) காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும். கொரோனா நிவாரண (Corona Relief) நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை 15ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை 11ம் தேதி முதல் 14ம் தேதி முடிய கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். 

11ம் தேதி முதல் 14ம் தேதி முடிய முற்பகல் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பண்டங்களை வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
ரேஷன் கடைகள் நேரம்
* தளர்வில்லா ஊரடங்கின்போது ரேஷன் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டது.
* காலை 9 மணி முதல் 12.30 மணி வரை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
* மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்.
* 14 பொருள் அடங்கிய தொகுப்பு 15ம் தேதி முதல் வழங்கப்படும்.
* 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரூ.2,000க்கான டோக்கன்.

ரேஷன் கடைகளில் (Ration Shops) அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ 
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம் 
கடலை பருப்பு- 250 கிராம் 
டீ தூள் -200கிராம் 
கடுகு- 100 கிராம் 
சீரகம்- 100 கிராம் 
மஞ்சள் தூள்- 100 கிராம் 
மிளகாய் தூள்- 100 கிராம் 
குளியல் சோப்பு 25 கிராம் – 1 
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 

ALSO READ | பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News