தமிழகத்தில் (Tamil Nadu) அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை (Schools Reopening) திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு (Tamil Nadu government) , மேலும் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு மாணவர்கள் வரலாம் என்று தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி., பள்ளிகள் முதற்கட்டமாக செப்டம்பர் 21 முதல் திறக்க அனுமதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வர செப்டம்பர் 21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ALSO READ | மீண்டும் பள்ளி மணியோசை: கொரோனா காலத்து பள்ளி எப்படி இருக்கும்? இதோ பார்க்கலாம்!!
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, மேலும் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு மாணவர்கள் வரலாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.,
10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் முதல் பள்ளிக்கு வர அனுமதி. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம். பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு மாணவர்கள் வர அனுமதி. ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிகளுக்கு வரவழைக்க அறிவுறுத்தல். ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு வரும் என்று கூறபட்டுள்ளது.
ALSO READ | பெற்றோர்கள் கவனத்திற்கு! விதிமுறைகள் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR