திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக் - கல்வி அலுவலர் சஸ்பெண்ட்!

வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வினாத்தாள்கள் லீக் ஆகி மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Nowshath | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 15, 2022, 02:26 PM IST
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக் - கல்வி அலுவலர் சஸ்பெண்ட்! title=

சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் வேளையில், வினாத்தாள் முன் கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் அடுத்தடுத்து வினாத்தாள் லீக் ஆகி வருகின்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் தேர்வு வினாத்தாளும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே இணையத்தில் வெளியானதாக புகார்கள் கூறப்பட்டது. அதேபோல பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெறக்கூடிய உயிரியல் வணிக கணிதம் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் லீக் ஆகியுள்ளது.

வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வினாத்தாள்கள் லீக் ஆகி மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

Education Officer Suspended

மேலும் படிக்க: மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியான செய்தி - கல்வி இயக்குனர் அறிவிப்பு

இந்த சம்பவம் குறித்து 2 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் பள்ளிக்கு தொடர்பு இருந்தால், ஏன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது எனவும், அதேநேரத்தில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கம்:

- திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது

-  மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது

-  அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு பொது தேர்வு மாணவர்களுக்கு இருக்கிறது 

- எனவே பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம்

- மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது

- கட்டாயம் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும்

மேலும் படிக்க: ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? நீட் வேண்டுமா? வேண்டாமா? ஓர் அலசல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News