தற்கொலை தீர்வல்ல -வீடியோ மூலம் நடிகர் சூர்யா உருக்கம்

அச்சமில்லை அச்சமில்லை - தற்கொலை தீர்வல்ல -  நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

Written by - RK Spark | Last Updated : Sep 18, 2021, 01:39 PM IST
தற்கொலை தீர்வல்ல -வீடியோ மூலம்  நடிகர் சூர்யா உருக்கம் title=

சென்னை:-  நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்றும் எதற்கும் தற்கொலை தீர்வல்ல என்பதையும் நடிகர் சூர்யா அறிவுறுத்தி தன்னபிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  மேலும், மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; ஒரு தேர்வு உங்களுடைய உயிரைவிட பெரியது அல்ல என்று நடிகர் சூர்யா கூறினார்.

தமிழக்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இதனிடையே நீட் தேர்வு அச்சம், பெற்றோர் வற்புறுத்தல், நீட் அரசியல் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.  இந்தநிலையில், தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துவரும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்று நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.  இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார்.  இந்தநிலையில், நீட் தேர்வுக்கு முந்தைய நாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அதேபோல, அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த வழக்கறிகர் கருணாநிதி. இவரது இரண்டாவது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய இந்த மானவை நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் மகள் செளந்தர்யா. பன்னிரண்டாம் பொது தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  நீட் தேர்வெழுதிய செளந்தர்யாவும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டார்.

suicide

ஊரப்பாக்கம் அருகே உள்ள அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆசிரிய தம்பதிகளான  கமலநாதன்- ஷீபா தம்பதிகளின் மகள் அனுசுயா தந்தை கமலநாதன் பணி செய்யும் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியிலேயே கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்தார்.  பின்னர் ஆன்லைன் மூலம் அந்த விடைகளைச் சரிபார்க்கும்போது நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்பது தெரியவந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்த அவர்,  தந்தையும் தாயும் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த அனுசுயா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சுமார் 40 சதவீதம் அளவுக்கு தீக்காயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் மனஉளைச்சலை போக்கும் வகையில் மனநல ஆலோசனை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில், நடிகர் சூர்யா மாணவா மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,  அச்சமில்லை அச்சமில்லை என்று தொடங்கும் அந்த வீடியோவில் மாணவ மாணவிகள் அனைவரும் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  ஒரு தேர்வு உங்களுடைய உயிரைவிட பெரியது அல்ல என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். உங்களுக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்களுக்கு பிடித்தவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள்.

பயம், கவலை, விரக்தி, வேதனை அனைத்தும் கொஞ்ச நேரத்தில் மறைந்து விடக் கூடிய விஷயங்கள்.  தற்கொலை என்பது உங்களை நேசிப்பவர்களுக்கு உங்கள் பெற்றோர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நம்பிக்கை தைரியத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News