TN Agri Budget 2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களும், குறிக்கோள்களும்

இரண்டாம் வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கங்களும், சிறப்பம்சங்களும்... 

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Mar 19, 2022, 12:35 PM IST
  • தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது
  • இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பது
  • வேளாண்மை பணிகளை இயந்திரமயமாக்குதல்
TN Agri Budget 2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களும், குறிக்கோள்களும் title=

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.தமிழக விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 2வது முறையாக தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களும், சிறப்பம்சங்களும்... 

வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு, திங்கட்கிழமை வரை சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 

மாநிலத்தின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒன்றான தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பினை உயர்த்துவதும், வேளாண் சார்ந்த துறைத்திட்டங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்த கிராம வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்தலும் ஆகும்.  

மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவதும், இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பது தமிழக அரசின் இந்த வேளாண் பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களாகும். 

வேளாண் பட்ஜெட் தகவல்களை உடனுக்குன் தெரிந்துக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விரைவான சேவை அளித்தல், பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தல், பயிர்களில் மரபுசார் இரகங்களை ஊக்குவித்தல் ஆகியவை இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் நோக்கங்கள் ஆகும்.

வேளாண்மை பணிகளை இயந்திரமயமாக்குதல், சூரிய சக்தியினை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தல் மற்றும் சந்தை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க உதவுதல் ஆகியவையும் திமுக தலைமையிலான தமிழக அரசின் முக்கிய நோக்கங்களாகும். 

2022-23 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் 

மொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.33,007.68 கோடி.(சென்ற 2021-22 ஆம் ஆண்டின் திருந்திய மதிப்பீடு – ரூ.32,775.78 கோடி) 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு. 
முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி. 
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு. 

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 நேரலையில் காண இங்கே கிளிக் செய்யவும்

சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள் இயக்கம் மற்றும் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்,  திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலமும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு இரண்டாவது மண்டலமும் அமைக்கப்படும். 

துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்டது) 
 சூரியகாந்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை  ஊக்குவித்தல். ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்  

அனைத்து கிராம நிலங்களுக்கும் புவியிடக்குறியீடு, பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி,  

உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி, பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி 

மேலும் படிக்க | தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட் பின்னணி

கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகை - கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950/-, கரும்பு சாகுபடிக்கு உதவி - ரூ.10 கோடி, சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் – ரூ.4.5 கோடி 

தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க - ரூ.30 கோடி, பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் (Vertical garden) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி, 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ. 15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகளை அமைக்க ரூ.10 கோடி 

சென்னை மற்றும் திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள் அமைக்க ரூ. 15 கோடி, மாநில அளவிலான "உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம்" அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்  

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி, அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி. 

மேலும் படிக்க | ஆறுதல் பாதி... ஏமாற்றம் மீதி... இரண்டும் கலந்த பட்ஜெட்

 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCO விற்கு ரூ.5,157.56 கோடி, ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள். 

விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத்  திட்டத்தின் மூலம் மூன்று இலட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி,  

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை நிதியுதவி மூலதன மானியமாக கொடுக்கப்படும்.

வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல். 

மேலும் படிக்க | நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News