ராகி, கம்பு நியாயவிலைக் கடைகளில் விற்பனை..! தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய உத்தரவிட்டு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:14 PM IST
  • நியாயவிலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை
  • அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • சென்னை, கோவையில் முதல் கட்டமாக தொடக்கம்
ராகி, கம்பு நியாயவிலைக் கடைகளில் விற்பனை..! தமிழக அரசு உத்தரவு title=

திமுக அரசு பொறுப்பேற்றதும் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் வேளாண் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக் கடைகளில் சிறுதானியம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது. 

ALSO READ | சேலத்தில் ’சதுரங்க வேட்டை’.. லட்சக்கணக்கில் மோசடி..! இரவோடு இரவாக காலியான நகைக்கடை

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் சிறுதானிய விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்பட்ட உள்ளன. அதன்படி, கம்பு, ராகி, திணை, குதிரைவாளி மற்றும் சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் இனிவரும் காலங்களில் நியாயவிலைக் கடைகளிலேயே கிடைக்கும். 

கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறுதானியங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சிறுதானியங்களின் விலையை முடிவு செய்யும் வகையில் கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு சிறுதானியங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து விரைவில் அறிவிக்க உள்ளது. 

ALSO READ | வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News