சிவகாசியில் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட பின்னர், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...
"ஆண்டாள் விவகாரம் தொடர்பாக வைரமுத்துவுக்கு என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன். மேலும் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்துார் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் எனுவும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜீயருக்கும் தன்னுடைய ஆதரவினை தெரிவித்துகொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தாயார் சன்னதியில் தரிசனம் செய்தோம். pic.twitter.com/GvzGr2n4mn
— Vijayakant (@iVijayakant) January 21, 2018
மேலும் ரஜினி மற்றும் கமல் அரசியல் பயணம் குறித்து பேசுகையில்... ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள், வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் இணைந்து போட்டியிடப் போவதில்லை, தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்!