இன்றைய காலகட்டத்தில் மடிக்கணினிகள் பலருக்கு அத்தியாவசியமான பொருளாக மாறியுள்ளன. அதுவும், கொரோனா காலம் முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கலாச்சாரம் அதிகமானவுடன் இதன் தேவை இன்னும் அதிகரித்துள்ளது. எந்த தேவையும் இல்லாமல் இருந்தாலும், சிலர் தங்களுக்கென ஒரு லேப்டாப் இருக்க வேண்டும் என ஆசைபடுகிறார்கள். மடிக்கணினியின் மோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் மக்கள் மடிக்கணினிகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அலுவலகங்களிலும் டெஸ்க்டாப்புகளின் இடங்களை லேப்டாப்கள் பிடித்துள்ளன. மடிக்கணினிகள் பிரத்யேகமாக இருப்பதுடன் டெஸ்க்டாப்புடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த இடத்தையே இவை ஆக்கிரமிக்கின்றன. தற்போது சந்தைகளில் குறைந்த விலையில் மடிக்கணினிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. உங்களிடம் பழைய லேப்டாப் இருந்து, நீங்கள் புதிய லேப்டாப் வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. குறைந்த விலையில் ஒரு லேப்டாப் வர உள்ளது.
இன்ஃபினிக்ஸ் (Infinix) அதன் குறைந்த விலை போன்களுக்கு பெயர் பெற்றது. இப்போது அந்த நிறுவனம் மலிவு விலையில் மடிக்கணினியை அறிமுகப்படுத்த உள்ளது. Infinix Inbook Y1 Plus என அழைக்கப்படும் இந்த சாதனம் இன்று அறிமுகமாகும். அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், லேப்டாப்பின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்களை ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. Infinix Inbook Y1 Plus பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | மலிவான விலையில் ஐபோன் 11! ரூ. 20000 வரை அதிரடி தள்ளுபடி
Infinix Y1 Plus: விவரக்குறிப்புகள்
Infinix Y1 Plus லேப்டாப் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. Infinix Y1 Plus ஆனது 250nits பிரகாசத்துடன் 15.6-inch FHD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று பட்டியல் வெளிப்படுத்துகிறது. இந்த லேப்டாப் ஒரு நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சுற்றிலும் மெல்லிய பெசல்களுடன் வருகிறது. இன்ஃபினிக்சின் இந்த லேப்டாப் Intel Core i3 10th gen செயலி மூலம் இயக்கப்படும்.
Infinix Y1 Plus: பேட்டரி
Infinix Inbook Y1 Plus லேப்டாப் 50Whr பேட்டரியைக் கொண்டிருக்கும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் வரை நீடிக்கும். இது 45W டைப்-சி சார்ஜருடன் வரும். இதன்மூலம் ஒரு மணி நேரத்தில் மடிக்கணினியை 75% வரை சார்ஜ் செய்ய முடியும். இந்த மடிக்கணினி விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இயங்கும். இந்த லேப்டாப்பில் இரட்டை LED விளக்குகள், இரட்டை மைக் மற்றும் AI நாய்ஸ் ரிடக்ஷன் அம்சத்துடன் 2MP வெப்கேமும் உள்ளது.
Infinix Y1 Plus: இந்தியாவில் இதன் விலை என்ன?
Infinix Y1 Plus இன் 256GB மாறுபாடு ரூ.44,490 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மறுபுறம் 512GB மாறுபாடு ரூ.49,490 ஆகும். இன்பினிக்ஸ் லேப்டாப்பின் விலை ரூ.30,000 க்கும் குறைவாக இருக்கும் என்று முன்பே உறுதிப்படுத்தியது.
மேலும் படிக்க | பேஸ்புக், இன்ஸ்டாவிற்கும் வருகிறது கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ