56 நாட்கள் வேலிடிட்டியில் ஏர்டெல் கொடுத்திருக்கும் புதிய அம்சம்..! சூப்பர் ப்ரீப்பெய்ட் பிளான்

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 56 நாட்கள் வேலிடிட்டியில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. இதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 8, 2023, 01:08 PM IST
  • ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீப்பெய்ட் பிளான்
  • 56 நாட்கள் வேலிடிட்டி - நாள்தோறும் 2ஜிபி டேட்டா
56 நாட்கள் வேலிடிட்டியில் ஏர்டெல் கொடுத்திருக்கும் புதிய அம்சம்..! சூப்பர் ப்ரீப்பெய்ட் பிளான் title=

ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கொடுக்கப்படும் இந்த திட்டங்கள் மற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களையும் சேர்த்து பொறாமைபட வைக்கும். அந்தளவுக்கு சூப்பரான அம்சங்களுடன் ப்ரீப்பெய்ட் திட்டங்களைக் கொடுக்கிறது. குறைவான விலையில் நிறைவான அம்சங்களை கொடுக்கும் ஏர்டெல்லின் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பரான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | சாம்சங்க் பம்பர் ஆஃபர்: ரூ.75 ஆயிரம் போன் வெறும் ரூ.30 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்..!

ப்ரீப்பெய்ட் பிளான் என்ன?

ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.549. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் 56 நாட்கள் செல்லுபடியாகும். வேலிடிட்டி காரணமாக மக்கள் இதை அதிகம் வாங்குகிறார்கள். 2 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். இந்த ரீசார்ஜை ஒருமுறை ஆக்டிவேட் செய்த பிறகு, 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் பேசினால், முதலில் வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் பாடல்களைக் கேட்பதுடன், சமூக ஊடகங்களை இயக்குவதற்கு 2 ஜிபி டேட்டா உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.  மேலும், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை 56 நாட்களுக்கு தொடர்ந்து செய்யலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ்  வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | வாவ்.. வெறும் ரூ.181 -ல் இவ்வளவு நன்மைகளா!! புதிய திட்டத்துடன் அசத்தும் Vodafone-Idea

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News