புதுடெல்லி: உங்கள் உயர்தர புகைப்படங்களுக்கு கூகிளின் Google Photo சேவையைப் பயன்படுத்துகிறோர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 1 ஜூன் 2021 க்குப் பிறகு, Google Photos சேவை இலவசமாக இருக்காது என்று கூகிள் அறிவித்துள்ளது.
அதாவது, அடுத்த ஆண்டு முதல் இந்த கிளவுட் சேவையைப் பயன்படுத்த நீங்கள் பணம் செலவிட வேண்டியிருக்கும். தற்போதுள்ள நிலையில், எந்தவொரு பயனரும் தங்களது புகைப்படங்களை இப்போது Google Photos-ல் வரம்பில்லாமல் சேமித்து வைக்கலாம். இதற்கு இப்போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
Google Photo-க்கு ஜூன் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும்
தொழில்நுட்ப தளமான தி வெர்ஜ்ஜின் படி, கூகிள் (Google) அடுத்த ஆண்டு முதல் தனது கூகிள் புகைப்பட சேவைக்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், ஜூன் 1 க்கு முன்பு 15 ஜிபி சேமிப்பகத்தில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது கூகிளில் இருந்து தெளிவாகியுள்ளது. அதாவது, பயனர்கள் அடுத்த ஆண்டுக்குள் தங்களுக்கான மற்றொரு கிளவுட் சேவைக்கு (Cloud Service) எளிதாக இடம்பெயர முடியும்.
ALSO READ: இனி whatsapp-ல் shopping-ம் செய்யலாம் தெரியுமா? புதிய அம்சம் அறிமுகம்….
Gmail அகௌண்டுகளும் மூடப்படும்
கூகிள் தனது நுகர்வோர் கணக்கிற்கான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது. இது அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும். மேலும், நீங்கள் இரண்டு ஆண்டுகளாக Gmail, Drive அல்லது Google Photos ஆகியவற்றில் எந்த செயல்பாடும் இல்லாமல் இருந்தால், அந்த ப்ராடெக்டுகளிலிருந்து நிறுவனம் உங்கள் உள்ளடக்கத்தை அகற்றக்கூடும்.
புதன்கிழமை, ஆக்டிவாக இல்லாத அல்லது Gmail, Drive (Google Docs, Sheets, Slides, Drawing, Form) ஆகியவற்றில் சேமிப்பக திறன் வரம்பை மீறும் நுகர்வோரின் கணக்குகளுக்கு மட்டும் இந்த புதிய விதிகள் பொருந்தும் நிறிவனம் கூறியது.
ALSO READ: ரீசார்ஜ் செய்யும் விலையில் phone வாங்கலாம் தெரியுமா? Rs.699 only!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR