"வாட்ஸ் அப்"பில் நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்ள தயாரா?

Last Updated : May 23, 2016, 01:45 PM IST
"வாட்ஸ் அப்"பில் நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்ள தயாரா? title=

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. அண்மை நாட்களில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளருக்கு பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டது "வாட்ஸ் அப்" செயலி. தற்போது வாட்ஸ்அப் நிறுவனமே அதிகாரபூர்வமாக வாட்ஸ் அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கோள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.

இப்போது கூகுள் ப்லே ஸ்டோரில் உங்களது வாட்ஸ் அப் பதிப்பை  பதிவிறக்கம் அல்லது அப்டேட் செய்வதன் மூலம் "வாட்ஸ் அப்" டெஸ்டர் பதிப்பை பெற்றுக்கொள்ள முடியும் அல்லது நீங்கள் APK இணைப்பு "http://apk.co/whatsapp/whatsapp-21680" மூலம் "வாட்ஸ் அப்"பை பதிவிறக்க செய்து உங்கள் ஆண்ட்ராய்டு  தொலைபேசியில் வீடியோ வசதியுடன் போன் அழைப்புகளையும் பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்த பின்னர், உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்தால் உங்களது வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி காணப்படும்.

ஆனால் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை எடுக்க முற்பட்டால் சர்வர் எரர் என்று கட்டும். அதாவது இதற்கு அர்த்தம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு டிவலப் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து இருந்தால் இந்த வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும். தற்போது சோதனை கட்டத்தில் கீழ் உள்ளது. இந்த வசதி கூடிய சிக்கரமே அறிமுகப்படுத்தப்படும்.

"வாட்ஸ் அப்"பில் வீடியோ காலிங் வசதி தரப்பட்டால் இதன் வழியே பார்த்து பேசிக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். இதற்கு எந்த கட்டணமும் இருக்காது மற்றும் இணைய இணைப்பிற்கான கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியதிருக்கும். எந்த செலவும் இன்றி உலகின் எந்த மூலையில் இருப்பவருடன் வீடியோ காலிங் மூலம் பேச முடியும்.

Trending News