Rolls-Royce கார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் போட் டெயில்; விலை ₹200 கோடி மட்டுமே..!

ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார் நிறுவனம் உலகின் மிக விலையுயர்ந்த காரான போட் டெயில் (Boat Tail) அறிமுகப்படுத்துகிறது. நான்கு இருக்கைகள் கொண்ட இந்த கார் பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2021, 01:22 PM IST
  • ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வைப் டெயில் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது.
  • காரைத் திறக்கும்போது பட்டாம்பூச்சியின் இறக்கைகள் போல் தெரிகிறது.
  • இப்போது வரை, இந்த ஸ்வீப் டெயில் ரோல்ஸ் ராய்ல் கார் தான் மிகவும் விலையுயர்ந்த கார்.
Rolls-Royce கார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் போட் டெயில்; விலை ₹200 கோடி மட்டுமே..! title=

ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார் நிறுவனம் உலகின் மிக விலையுயர்ந்த காரான போட் டெயில் (Boat Tail) அறிமுகப்படுத்துகிறது. நான்கு இருக்கைகள் கொண்ட இந்த கார் பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.  

ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) சொகுசு காரான லிமோசைன் கார் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமானது. ஆனால் இப்போது இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய கார் உலகின் மிக விலையுயர்ந்த கார் ஆகும். இந்த கார் போட் டெயில் என்று பெயரிடப்பட்டுள்ளது . இதன் விலை 13 மில்லியன் டாலர்.  அதாவது 200 கோடி. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வைப் டெயில் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளது. காரைத் திறக்கும்போது பட்டாம்பூச்சியின் இறக்கைகள் போல் தெரிகிறது.

இப்போது வரை, இந்த ஸ்வீப் டெயில் ரோல்ஸ் ராய்ல் கார் தான்  மிகவும் விலையுயர்ந்த கார்.
இந்த காரில், விடுமுறை அல்லது சுற்றுலாவைக் கொண்டாட செல்பவரக்ளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ALSO READ | Best Electric Cycles: புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility

 

காரின் பின்பகுதியில் பொருட்களை வைப்பதற்கான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கார் உரிமையாளருக்கு பிடித்த ஷாம்பெயின் பாட்டில்களை வைக்க கூடிய கூலர் அமைக்கப்பட்டுள்ளது.  அதோடு இதை வாங்கும் உரிமையாளரின் விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப, வசதிகள் கஸ்டமைஸ்ட் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2021 ரோல்ஸ்-ராய்ஸ் போட் டெயில் காரின் விலை, இந்திய ரூபாயில் கூறவேண்டும் என்றால் 200 கோடி ரூபாய். அதனால், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சிறு சிறு பாகங்கள் கூட மிகவும் கவனத்துடன், மிகவும் நேர்த்தியான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன

இந்த காரை வடிவமைக்கும் பணி கிட்டத்தட்ட 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது.  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளர்கள்  இந்த வடிமைப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த உலகின் மிக விலையுயர்ந்த காரின் 3 மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த கார்களில் ஒன்றை இசைத் துறையைச் சேர்ந்த ஒருவரும் அவரது மனைவியும் வாங்கியுள்ளனர். இருப்பினும், அந்த தம்பதியின் அடையாளம் வெளியிடப்படாமல் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸின் இந்த படகு வால் கார் 19 அடி நீளம் கொண்டது. மேலும், இதில் உள்ள எஞ்சின் மற்ற கார்களைப் போன்ற 6.75 லிட்டர் V-12 ஆகும்.

ALSO READ |புதிய கார்களில் 3 லட்சம் வரை பம்பர் தள்ளுபடி: அதிக சலுகை உள்ள கார்களின் பட்டியல் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link -  https://bit.ly/3hDyh4G

Apple Link -  https://apple.co/3loQYeR

 

 

Trending News