அப்போலோ நிறுவன குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயலலிதா சேர்க்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அப்போலோ குறித்த தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டியும் அவ்வப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ஜெயலலிதா-க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பேசினார்.
இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.
தொடர்ந்து, அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், சென்னை ஆயிரம் விளக்கு அருகில் உள்ள அப்போலோவில் அவருக்கு இதய அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.