இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 2006 ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற நினைத்ததாக, மற்றொரு இந்திய நட்சத்திரமான விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.
லார்ட்ஸை நினைவில் வைத்துக்கொண்டு, லீட்ஸ் மறந்துவிடுங்கள். நல்ல தருணங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் போட்டிகளில் நடந்து கொண்டே இருக்கும் என அணிக்கு நம்பிக்கை அளித்த ரவி சாஸ்திரி.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தவர் ஹார்டிக் பாண்டியா.
சரியான நேரத்தில் டேவிட் வார்னரின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியது, சிக்கலான சமையங்களில் சிறப்பான பந்துவீச்சு என நேற்றைய ஆட்டத்தினில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பாண்டியாவின் இந்த செயல்களைப் பாராட்டி அணித்தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவேற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியினில் இந்தியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி ரசிகர்கள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளார்.
22 வயதான இந்தியாவின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று நடைப்பெற்ற போட்டியினில் மேத்யூ வாடே, ஆஷ்டன் ஆசர், கம்மின்ஸ் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி தனது ‘ஹாட்ரிக்’ சாதனையை பதிவு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி, தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவினை கோலி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது விளம்பரப படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும், தான் மிகவும் பெருமை படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சென்னை வந்தனர்.
இந்திய கிரிகெட் அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 T20 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிகெட் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர்.
இலங்கைக்கு எதிரான கிரிகெட் தொடரில் இந்திய விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூலம் கிரிகெட் ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தாண்டு (2018) இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான தொடரின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டினையும் ஏற்கனவே இந்தியா கைப்பற்றிவிட்டது. மீதம் உள்ள டி20 போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் ஆசையினை பூர்த்தி செய்யும் என எதிர்பாக்கப்படுகிறது.
கிரிக்கெட் உலகில் டோனி ஒரு தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் டோனி, பல சிக்கலான சமயங்களில், இக்கட்டான சமயங்களிலும் இந்திய அணியை கரை சேர்த்துள்ளார். தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிகெட் தொடரிலும் தனது திறமையை மீண்டும் நிருபித்து வருகிறார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் நடத்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என சற்று முன் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்றும், இந்திய அணியின் பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணி இம்மாதம் இந்தியா வர உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி செப்டம்பர் 16ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆட உள்ளது. பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.