கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக அறியப்பட்ட நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாவது தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மும்பையில் முடிதிருத்த கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா அரசு தனது 'மிஷன் பிகின் அகெய்ன் பேஸ் IV(Mission Begin Again Phase IV)' -ன் கீழ் மாநிலத்தில் மீண்டும் சில நடவடிக்கைகளை தொடர அனுமதித்துள்ளது.
கொரோனா (COVID-19) தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5,08,953-ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் ஜூலை 31-வரை மூடப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையிலும் ப்ளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாக தில்லி முதலவர் அர்விந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
பிற மாநிலத்தில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும் என பாமக நிறுவனம் இராமதாசு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கடந்த மே 7-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட 'வந்தே பாரத்' பிரச்சாரத்தின் கீழ் இதுவரை சுமார் 3.6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகாரிகள் உட்பட மொத்தம் 345 கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா(COVID-19) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக GCC ஆணையர் G பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களில் சுமார் 50 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மக்கள் வீட்டிற்குள் இருக்கவே விரும்புகிறார்கள். இதனால், இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிரடி ஆஃபரை Vodafone Idea கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.